இடதுசாரி கட்சிகளுக்கு சீனாவிலிருந்து எவ்வளவு பணம் வந்தது?

Updated : ஜூன் 29, 2020 | Added : ஜூன் 29, 2020 | கருத்துகள் (55)
Share
Advertisement

புதுடில்லி: சீன விவகாரத்தில் மோடியை யார் விமர்சித்தாலும், அவர்களுடைய வண்டவாளங்களை உடனே வெளியே கொண்டு வர வேண்டும் என, பா.ஜ., தலைமை உத்தர விட்டுள்ளதாம். இதனால், 'எதிர்க்கட்சிகள், சில ஆண்டுகளுக்கு முன், இந்த விவகாரத்தில் என்ன பேசினர்; கட்சிகளுக்கு வெளிநாட்டிலிருந்து நிதி வருகிறதா; அப்படியானால் எவ்வளவு' என, பல விபரங்களை தோண்டி எடுக்க ஆரம்பித்துள்ளனர், பா.ஜ.,வினர். இதற்கு அரசு தரப்பிலிருந்து அனைத்து உதவிகளும் வழங்கப்படுகின்றன.



latest tamil news


சீதாராம் யெச்சூரி தலைமையில் ஒன்று; நம்ம ஊர் டி.ராஜா தலைமையில் கொண்ட இன்னொன்று என, இரண்டு இடதுசாரி கட்சிகள் இயங்கி வருகின்றன. இவர்கள் பொதுவாகவே, சீனா, ரஷ்யா விவகாரங்களில் அதிகம் பேசாமல், அடக்கி வாசிப்பர். இப்போது இவர்கள், காங்., ராகுலைப் போல, மோடியை, சீன விவகாரத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


latest tamil news


'காங்., கூட்டணி ஆட்சியில் இருந்த, 2004 முதல் 2014 வரை, நம் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு வெளிநாட்டிலிருந்து எவ்வளவு நிதி உதவி கிடைத்தது; குறிப்பாக, சீனா மற்றும் ரஷ்யாவிலிருந்து எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது' என, அனைத்து விபரங்களையும், மத்திய அரசு சேகரித்து விட்டது. இரண்டு இடதுசாரி கட்சிகளுக்கும், சீனாவிலிருந்து எவ்வளவு பணம் தரப்பட்டது என்பது, விரைவில் வெளியாக உள்ளது என, கமுக்கமாக சிரிக்கின்றனர், பா.ஜ., தலைவர்கள்.

Advertisement




வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Ravindran - Chennai,இந்தியா
05-ஜூலை-202010:41:30 IST Report Abuse
Parthasarathy Ravindran கம்யூனிஸ்ட் என்றாலே தேச துரோகிதான். அதிலும் இங்குஇருக்கும் கம்யூனிஸ்ட் நாட்டிற்கு எதிராக எதையும் செய்ய துணிந்தவர்களாக தான் இருப்பார்கள். பல எட்டப்பர்கள்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
05-ஜூலை-202004:20:34 IST Report Abuse
J.V. Iyer எல்லா ஊழல் எதிர்க்கட்சிகளும் தேசத்துரோக கட்சிகள். மோடிஜியை எதிர்க்க, இந்தியாவையே எதிர்ப்பார்கள் இந்த தேச விரோதிகள்.
Rate this:
Cancel
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
05-ஜூலை-202004:02:57 IST Report Abuse
NicoleThomson லீலாவதி இருந்த கட்சியில் இப்படியும் கோடாரிகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X