பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பா?: மருத்துவ குழுவினருடன் முதல்வர் ஆலோசனை

Updated : ஜூன் 29, 2020 | Added : ஜூன் 29, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement

சென்னை: அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பரவி வருவதால் மேலும் எவ்வளவு நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பது என்பதை முடிவு செய்ய மருத்துவ நிபுணர் குழுவினருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.latest tamil newsகொரோனா நோயை கட்டுப்படுத்த அரசுக்கு ஆலோசனைகள் வழங்க மருத்துவ நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் ஊரடங்கை நீட்டிப்பதற்கு முன் மருத்துவ நிபுணர் குழுவினருடன் முதல்வர் ஆலோசனை நடத்தி அவர்கள் கூறும் கருத்துக்கள் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிப்பை அறிவித்து வருகிறார்.


latest tamil newsஜூன் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் முழு ஊரடங்கை முதல்வர் அறிவித்தார். அதன்பின் மதுரை, தேனி மாவட்டங்களிலும் குறிப்பிட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மண்டலங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. ஊரடங்கு நாளை (ஜூன் 30) நிறைவடைய உள்ள நிலையில் நோய் பரவல் இன்னமும் குறையவில்லை.

இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவினருடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். இக்கூட்டம் முடிந்த பின் ஊரடங்கு குறித்து அரசு முடிவு செய்து அறிவிப்பு வெளியிடும் என தெரிகிறது.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Perumal - Chennai,இந்தியா
29-ஜூன்-202013:58:33 IST Report Abuse
Perumal Some persons are suggesting to go for 2 months lockdown with the help of military.I don't know what he thinks of people. Complete lockdown is not at all possible.What people will do for their livelihood. Lockdown is not the only solution to contain disease.Self discipline and sincere follow up of do's and don't only can solve the issue.
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
29-ஜூன்-202012:57:05 IST Report Abuse
தமிழ்வேள் //அரசு எந்தவித திட்டம் இலக்கு எதுவுமின்றி இயங்கிக்கொண்டுள்ளது.. லாக் டவுன் மட்டுமே நோயையும் தொற்றையும் குறைக்காது.. லாக் டவுனால் வேலையின்மை, பட்டினி சாவுகள் அதிகரிக்கும். அரசு கொடுக்கும் ஆயிரம் ருபாய் சர்வரோக நிவாரணீயோ, அட்சய பாத்திரமோ அல்ல. நோய் மூலம் ஆன வைரஸை கட்டுப்படுத்த வழி பார்க்காமல், தொற்றை குறைக்க முயற்சிக்கிறார்கள்..அலோபதி வைத்தியத்தை மட்டும் தூக்கிப்பிடிக்கும் போக்கு ஐயம் தருகிறது.. சித்த மருத்துவம், ஆயுர்வேதத்தில் வைரஸ் பாதிப்பு முற்றிலும் குணமானதற்கு சான்றுகள் உள்ள போது, ஏன் அலோபதியை மட்டும் அரசு ஆதரிக்கவேண்டும்..எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் விளையாடியிருக்கிறது இதன் பின்னால்...?//-
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
29-ஜூன்-202012:57:04 IST Report Abuse
அசோக்ராஜ் பணக்காரர்களுக்கு மட்டுமே வாழ உரிமை உண்டு. தினக்கூலிகளுக்கு உழைத்து வாழ உரிமை இல்லை என்று ஓர் அவசர சட்டம் போட்டு விட்டு ஊரடங்கை நீட்டிக்கலாம். எதையுமே சட்டத்தின் மூலம் செய்ய வேண்டும் என்று அரசியல் அமைப்பு சொல்கிறது. பட்டினிக் கொலையும் தூக்கு தண்டனை போல் சட்டபூர்வமாக செய்யணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X