ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பா?: மருத்துவ குழுவினருடன் முதல்வர் ஆலோசனை| Call on lockdown extension today | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பா?: மருத்துவ குழுவினருடன் முதல்வர் ஆலோசனை

Updated : ஜூன் 29, 2020 | Added : ஜூன் 29, 2020 | கருத்துகள் (22)
Share

சென்னை: அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பரவி வருவதால் மேலும் எவ்வளவு நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பது என்பதை முடிவு செய்ய மருத்துவ நிபுணர் குழுவினருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.



latest tamil news



கொரோனா நோயை கட்டுப்படுத்த அரசுக்கு ஆலோசனைகள் வழங்க மருத்துவ நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் ஊரடங்கை நீட்டிப்பதற்கு முன் மருத்துவ நிபுணர் குழுவினருடன் முதல்வர் ஆலோசனை நடத்தி அவர்கள் கூறும் கருத்துக்கள் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிப்பை அறிவித்து வருகிறார்.


latest tamil news



ஜூன் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் முழு ஊரடங்கை முதல்வர் அறிவித்தார். அதன்பின் மதுரை, தேனி மாவட்டங்களிலும் குறிப்பிட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மண்டலங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. ஊரடங்கு நாளை (ஜூன் 30) நிறைவடைய உள்ள நிலையில் நோய் பரவல் இன்னமும் குறையவில்லை.

இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவினருடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். இக்கூட்டம் முடிந்த பின் ஊரடங்கு குறித்து அரசு முடிவு செய்து அறிவிப்பு வெளியிடும் என தெரிகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X