'ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டோமோ'; குழப்பத்தில் சோனியா

Updated : ஜூன் 29, 2020 | Added : ஜூன் 29, 2020 | கருத்துகள் (43+ 28)
Share
Advertisement

புதுடில்லி: இந்திய - சீன எல்லைப் பிரச்னை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே சண்டை வருமோ, இல்லையோ; இந்த விஷயத்தில், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே, தினமும் சண்டை நடந்து கொண்டிருக்கிறது.



latest tamil news



ராகுல், தன் வழக்கமான பாணியில், 'இந்திய எல்லையை சீனாவிற்கு கொடுத்து விட்டார், மோடி' என, 'டுவிட்டரில்' தினந்தோறும் கண்டபடி விமர்சித்துக் கொண்டிருக்கிறார். 'பொய் சொல்வதே, ராகுலின் வழக்கம்' என, பா.ஜ., பதிலடி கொடுப்பதோடு நிறுத்தாமல், வேறொரு வேலையையும் செய்துள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, அப்போதைய பாதுகாப்பு அமைச்சர், அந்தோணி, பார்லிமென்டில், ஒரு கேள்விக்கு பதில் சொன்னதை, 'வீடியோ'வாக வெளியிட்டுள்ளது. 'பாகிஸ்தானும், சீனாவும் நம் நிலத்தை ஆக்கிரமித்து விட்டன' என, புள்ளி விபரத்தோடு, காங்., அமைச்சர் பேசிய வீடியோ, இப்போது வலம் வந்து கொண்டிருக்கிறது. இதற்கு பதில் சொல்ல முடியாமல், சோனியா தவித்துக் கொண்டிருக்கிறார்.


latest tamil news


இன்னொரு பக்கம், சீனாவிலிருந்து காங்கிரசுக்கு கிடைத்த நிதி உதவி தொடர்பான புள்ளி விபரங்களையும், பா.ஜ.,வினர் பட்டியலிட்டு வருகின்றனர். இதை எதிர்கொள்ள முடியாமல், ஏதேதோ ஒப்புக்கு பதில் சொல்லி வருகின்றனர், காங்., தலைவர்கள். 'இப்படி கண்டமேனிக்கு சீனா விவகாரத்தில் பேச வேண்டாம்' என ராகுலுக்கு, சில சீனியர் தலைவர்கள் எடுத்துச் சொன்னார்களாம்.

ஆனால் ராகுலோ, 'மோடிக்கு எதிரான என் நடவடிக்கைகளுக்கு, கட்சி சீனியர் தலைவர்கள் ஆதரவு தர மறுக்கின்றனர்' என, மற்ற சீனியர்களிடம் குற்றம் சாட்டியுள்ளாராம். பிரியங்காவும், சகோதரருக்கு ஆதரவாக கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசியுள்ளார். 'சீனா விவகாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டோமோ...' என, சோனியா குழப்பத்தில் இருப்பதாக மூத்த தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (43+ 28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Giridharan Srinivasan - Chennai,இந்தியா
05-ஜூலை-202014:23:02 IST Report Abuse
Giridharan Srinivasan இந்த இரண்டு [சோனியா, ராகுல்] ம் ஒன்று வாயை திறக்காமல் தங்களுக்கு கிடைக்கிற [எம்.பிக்கான] சம்பளத்தை ஒழுங்கா இந்த தேசத்தில் இருக்க வேண்டும் இல்லையென்றால் இத்தாலிக்கு சென்று கீழ்த்தர, வெட்டி அரசியல் செய்து கொண்டு இருக்க வேண்டும்.
Rate this:
Cancel
Parthasarathy Ravindran - Chennai,இந்தியா
03-ஜூலை-202019:47:30 IST Report Abuse
Parthasarathy Ravindran சீக்கிரமாக குடும்பத்துடன் இத்தாலிக்கு கிளம்புங்கள். இனிமேலாவது நாங்களும் எங்கள் சந்ததியும் நிம்மதியாக இருப்போம்.
Rate this:
Cancel
Subbanarasu Divakaran - bengaluru,இந்தியா
03-ஜூலை-202000:30:45 IST Report Abuse
Subbanarasu Divakaran சாணக்கியன் பழைய காலத்திலேயே சொன்ன உண்மைகள் இப்போது பார்க்கிறோம். சீனாவை நம்பி பறிபோன நேரு பெருந்தகை விரைவிலேயே மரணம் அடைந்தார். இவர்களை நம்புவது கொடும் உயிர்கள் உள்ள நீரில் கால் வைப்பதாகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X