பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை போல் கோவைக்கும் அபாயம்! அதிகரிக்கிறது கொரோனா பரவல்

Updated : ஜூன் 29, 2020 | Added : ஜூன் 29, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
கோவை : கொரோனா பரவலில், சென்னையின் பாதையில் கோவையும், அபாய கட்டத்தை நோக்கி மெல்ல நகர்ந்து கொண்டிருப்பதாக அதிர்ச்சியும், வேதனையும் தெரிவிக்கிறது, மருத்துவ வட்டாரம். கோவையில் நேற்றுவரை, 460 பேருக்கு தொற்று ஏற்பட்டு, பலியானவர் எண்ணிக்கை, நான்காக உயர்ந்தது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரத்தை, தமிழக அரசு தினமும் அறிக்கையாக வெளியிட்டு வருகிறது. நேற்று வரை மாநிலம்

கோவை : கொரோனா பரவலில், சென்னையின் பாதையில் கோவையும், அபாய கட்டத்தை நோக்கி மெல்ல நகர்ந்து கொண்டிருப்பதாக அதிர்ச்சியும், வேதனையும் தெரிவிக்கிறது, மருத்துவ வட்டாரம். கோவையில் நேற்றுவரை, 460 பேருக்கு தொற்று ஏற்பட்டு, பலியானவர் எண்ணிக்கை, நான்காக உயர்ந்தது.latest tamil newsதமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரத்தை, தமிழக அரசு தினமும் அறிக்கையாக வெளியிட்டு வருகிறது. நேற்று வரை மாநிலம் முழுவதும் மொத்தம், 82 ஆயிரத்து, 275 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 45 ஆயிரத்து 537 பேர், குணமடைந்துள்ளனர். ஆயிரத்து, 79 பேர் உயிரிழந்துள்ளனர்; நேற்று ஒரே நாளில், 54 பேர் பலியாகியுள்ளனர்.

கோவையைப் பொறுத்தவரை, நேற்றுவரை, 460 பேர் பாதிக்கப்பட்டு, 184 பேர் குணமடைந்துள்ளனர். ஒருவர் மட்டுமே உயிரிழந்த நிலையில், 274 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்கிறது, அரசின் புள்ளிவிவரம்.


உண்மைதான் என்ன?


கோவையில் இதுவரை, கொரோனாவுக்கு நான்கு பேர் பலியாகியுள்ளனர் என்கிறது, மருத்துவ வட்டாரம். கோவை, பேரூரைச் சேர்ந்த, 90 வயது முதியவரின், நெருங்கிய உறவினரான பெண்ணுக்கு, சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதியாகி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் முதியவரும் மூச்சு திணறல் பாதிப்பால் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று உயிரிழந்தார்.


latest tamil news


ஏற்கனவே, கோவையைச் சேர்ந்த ஒருவர், கொரோனா பாதிப்பால் சென்னையில் இறந்தார். தொடர்ந்து, ஆர்.ஜி.புதுாரைச் சேர்ந்த இளைஞர், வேலாண்டிபாளையத்தைச் சேர்ந்த முதியவர் என, இருவர் இறந்தனர். தற்போது நான்காவதாக, முதியவர் உயிரிழந்துள்ளார்.

கொரோனாவுக்கு பலியானவர் எண்ணிக்கை கோவையில், நான்காக அதிகரித்துள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் கூறும் நிலையில், தமிழக அரசின் நேற்றைய அறிவிப்பில், இதுவரை, ஒரே ஒருவர் மட்டுமே பலியாகியிருப்பதாக குறிப்பிடப்பட்டிருப்பது, மக்களை வீண் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா உயிரிழப்புகள் மறைக்கப்படுகிறதோ என்ற சந்தேகத்துக்கும் இடமளித்துள்ளது.

கோவை மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் ரமேஷ்குமாரிடம் கேட்டபோது, ''நாங்கள் எல்லா கணக்குகளையும் சரியாக அனுப்பி விட்டோம். ஆனால், கொரோனா பட்டியலில் இறப்பு விபரம் இடம் பெறாமல் இருப்பது குறித்து தெரியவில்லை. இறந்தவர்கள் நான்கு பேர் என்றாலும், நேற்று இறந்த பேரூரை சேர்ந்த முதியவர், வேலாண்டிபாளையத்தைச் சேர்ந்த முதியவர் ஆகிய இருவருக்கும் கொரோனா இருக்கலாம் என்ற சந்தேகம் தானே, தவிர அவர்கள் கொரோனா பாசிட்டிவ் என்று உறுதிசெய்யப்படவில்லை. மற்ற இரண்டு இறப்புகளும் கணக்கில் காட்டப்பட்டுள்ளது. கொரோனா பட்டியலில் இடம்பெறாதது குறித்து சரிபார்க்க வேண்டும்,'' என்றார்.


latest tamil newsசென்னை போல கோவையும்...


விழிப்புணர்வு மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் போதிய அளவில் கடைபிடிக்காததால், கொரோனா பாதிப்பு சென்னையில் கட்டுப்படுத்த இயலாத நிலைக்கு சென்றுவிட்டது. அதே போன்றதொரு அபாயகட்டத்தை நோக்கி கோவையும் சென்று கொண்டிருப்பதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் அச்சமும், வேதனையும் தெரிவிக்கின்றனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகத்தின் கீழ் அனைத்து துறைகளும் இரவு, பகல் பாராது பணியாற்றிக்கொண்டிருந்தாலும், நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. இப்படியே சென்றால் ஒரு கட்டத்தில் சென்னையைப் போன்று, கோவையும் மாறிவிடும் அபாயம் உள்ளது.

அதிகாரிகள் கூறுகையில், 'கொரோனா தொற்று அதிகரித்தால், கல்லுாரி, பல்கலை மாணவர் விடுதிகள் சிகிச்சை வார்டுகளாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சிகிச்சைக்கு படுக்கை வசதிகள் போதாது என்ற நிலை ஏற்பட்டால், கல்லுாரி வளாகங்கள் பயன்படுத்தப்படும்' என்றனர்.


நீலகிரியில் 71 பேருக்கு தொற்று


நீலகிரி மாவட்டத்தில், கடந்த இரண்டு வாரங்களாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று, ஐந்து பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்படி, தொற்று எண்ணிக்கை, 71 ஆக அதிகரித்தது. 30க்கும் மேற்பட்ட இடங்களில், 3,100 குடும்பங்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளன. 26 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மாவட்டத்தில் தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளில், கபசுர குடிநீர், நோய் எதிர்ப்பு சக்திக்கான வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.


திருப்பூரில் 2,969 பேர் வீட்டு கண்காணிப்பில்...


திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு, 147 ஆக இருந்தது. நேற்று, மேலும் மூன்று பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரியில, கொரோனா பாதித்த நபருடன் தொடர்பில் இருந்த 56 வயது நபர், பல்லடம் சென்னிமலைபாளையம் திரும்பியிருந்தார். இவருக்கு, தொற்று இருப்பது நேற்று உறுதியாகியுள்ளது.

தஞ்சாவூரில் இருந்து, பல்லடம் கணபதிபாளையம் வந்த, 44 வயது ஆண்; தேனியில் இருந்து, வீரபாண்டி புளியங்காடு வந்த 44 வயது ஆண் என, மூன்று பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. புளியங்காடு பகுதியை சேர்ந்த நபரின், 40 வயது மனைவி மற்றும் 20 வயதுள்ள மகளுக்கு ஏற்கனவே, கொரோனா தொற்றுக்கு கோவையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், அவருக்கும் நேற்று தொற்று உறுதியாகியுள்ளது. நேற்றைய நிலவரப்படி, மாவட்டத்தின் மொத்த பாதிப்பு, 150 ஆக உயர்ந்துள்ளது.

கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறுகையில், ''மாவட்டத்தில், கொரோனா பாதித்த, 150 நபர்களில், 117 பேர் குணமாகிவிட்டனர்; 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெளியே இருந்து வந்துள்ள, 2,969 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர்,'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
29-ஜூன்-202011:49:44 IST Report Abuse
Sivagiri இப்போதான் நாடு முழுவதும் முழு ஊரடங்கு 21-நாட்கள் போட வேண்டிய சரியான டைம் . . .
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
29-ஜூன்-202011:28:52 IST Report Abuse
Visu Iyer அரசு.. அறிக்கை மட்டும் தான் வெளியிடுகிறது.. என்று சொல்றீங்களா..?
Rate this:
Cancel
Sri Ra - Chennnai,இந்தியா
29-ஜூன்-202011:15:02 IST Report Abuse
Sri Ra மக்களை திருத்த முடியாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X