பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்புக்கு செல்ல ஆசிரியர்கள் மறுப்பது ஏன்?

Updated : ஜூன் 29, 2020 | Added : ஜூன் 29, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
சென்னை; தன்னார்வ பணிக்கு அனுப்பப்பட்ட ஆசிரியைக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டதால், கொரோனா கட்டாய தன்னார்வ பணிக்கு செல்ல, ஆசிரியர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.கொரோனா தொற்றை ஒழிக்கவும், அதன் பரவலை தடுக்கவும், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நோய் தொற்று பாதித்த குடும்பத்தினர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டோருக்கு உதவ, தன்னார்வலர்கள்
coronavirus, covid 19, corona, tamil nadu, கொரோனா தடுப்பு, ஆசிரியர்கள்,

சென்னை; தன்னார்வ பணிக்கு அனுப்பப்பட்ட ஆசிரியைக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டதால், கொரோனா கட்டாய தன்னார்வ பணிக்கு செல்ல, ஆசிரியர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்றை ஒழிக்கவும், அதன் பரவலை தடுக்கவும், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நோய் தொற்று பாதித்த குடும்பத்தினர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டோருக்கு உதவ, தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நிர்வாகப்பணி, தேர்வுப்பணி மற்றும் விடைத்தாள் திருத்தும் பணி இல்லாத ஆசிரியர்களுக்கு, சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் வாயிலாக, கொரோனா தன்னார்வ பணி வழங்கப்படுகிறது.முதல் கட்டமாக, கொரோனா தன்னார்வ பணிக்கு ஆசிரியர்கள் தாமாகவே முன் வந்தனர். ஆனால், சென்னையில் ஏற்பட்ட அதிகபட்ச பரவலால், பல ஆசிரியர்கள் இந்த பணியை கைவிட்டனர். ஆனால், சில வாரங்களாக ஆசிரியர்களை கட்டாயம் தன்னார்வ பணியில் ஈடுபட வேண்டுமென, மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டுள்ளன.


latest tamil news


இந்நிலையில், சென்னை, அடையாறு மண்டலத்தில், சி.எம்.எஸ்., திடீர் நகர் அரசு பள்ளியை சேர்ந்த ஆசிரியை ஒருவர், தன்னார்வ பணியில் ஈடுபட்ட நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.அதனால், கொரோனா தன்னார்வ பணியில் இருந்து, ஆசிரியர்கள் விலக துவங்கியுள்ளனர். மாணவர்களுக்கு பாடங்கள் நடத்த வேண்டிய பணியில் உள்ள தங்களை, கட்டாய தன்னார்வ பணியில் இருந்து விடுவிக்குமாறு, கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
29-ஜூன்-202016:19:17 IST Report Abuse
மலரின் மகள் வகுப்பறைகள் திறப்பதாக இருந்தால் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒருமுறைக்கு இருமுறை பரிசோதனை செய்து விட்டுத்தான் அவர்கள் வகுப்பறைக்கு அனுமதிக்கவேண்டும். பள்ளி சிறார்கள் நாட்டின் எதிர்காலம்.
Rate this:
Cancel
29-ஜூன்-202015:53:06 IST Report Abuse
ஆப்பு முன் மாதிரியா மந்திரிகள், எம்.எல்.ஏக்கள், நீதிபதிகள் களமிறங்கட்டும். அவிங்கதான் பப்ளிக் சர்வண்ட்ஸ்.
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
29-ஜூன்-202015:17:41 IST Report Abuse
Rengaraj கருத்து சொல்வதற்கு முன்னர் அரசு வழங்கும் நோய்த்தடுப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் பற்றியும் இங்கே விவாதிக்க வேண்டும். ஏற்கனேவே தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான முகாம்களில் அரசு தரப்பில் வழங்கவேண்டிய பாதுகாப்பு அம்சங்கள், குடிநீர், பாத்ரூம், உணவு வசதி இவை பற்றி குறை சொல்கிறார்கள். ஆசிரியர்களை தன்னார்வ பணியில் இறக்கி அவர்கள்மூலமாக தான் இங்கே கொரோனா பரவி விட்டது என்று கூறமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அரசு அலுவலகங்கள் அனைத்தும் முழுவதுமாக செயல்படுகிகிறதா என்று தெரியவில்லை. நூறு சதவீதம் அரசு அலுவலர்கள் வருவது இல்லை. அவர்களுக்கு முழு சம்பளம் வழங்கப்படும் என்று வைத்துக்கொண்டால் ஆசிரியர்கள் மட்டும் சம்பளத்தை விட்டுத்தரவேண்டுமா? கட் என்றால் அனைவருக்கும் கட் பண்ணனும் பாகுபாடு காட்டக்கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X