தெரு நாய்களின் ‛காவலர்' ராஜேஷ்

Updated : ஜூன் 29, 2020 | Added : ஜூன் 29, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement



latest tamil news


சென்னை காசிமேடு
கொரோனா ஊரடங்கு காரணமாக கண்ணுக்கு எட்டிய துாரம் வரை மனித நடமாட்டமே இல்லை
வெறிச்சோடிக்கிடந்த சாலைகளில் தெரு நாய்கள் மட்டும் அங்கும் இங்கும் உலாத்திக்கொண்டும் அவ்வப்போது தலையை நிமிர்த்தி யாருடைய வரவையோ எதிர்பார்த்துக் கொண்டும் இருந்தன


latest tamil news


அந்த நாய்களின் கண்களும்,ஒட்டிப்போயிருந்த வயிறும் அவைகள் பசித்திருக்கின்றன என்பதை வெளிப்படுத்தியது.
அவர்கள் எதிர்பார்த்தது போலவே ஒருவர் இரு சக்கர வாகனத்தில் அங்கு வந்து நின்றார் வாகனத்தின் முன்னால் ஒரு வாளி,வாளி நிறைய உணவு.
இவரைப் பார்த்ததும் அங்கு இருந்த நாய்கள் மிகவும் உற்சாகமாகி அவரைச் சுற்றி சுற்றி வந்தன அவர் வாளியுடன் வாகனத்தை விட்டு இறங்குவதற்குள் மேலும் பல நாய்கள் எங்கு இருந்தோ ஒடி வந்து அவரைச் சுற்றி வாலாட்டியபடி நின்றது.
வாளியில் இருந்து உணவை எடுத்து நாய்களுக்கு கொடுக்க ஆரம்பித்தார் அந்த நாய்கள் உணவிற்காக தங்களுக்குள் அடித்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு நாய்க்குமாக தனித்தனியாக இடைவெளிவிட்டு உணவு வைத்தார்.
நாய்கள் நன்றாக சாப்பிடுகிறதா என கவனித்துக் கொண்டார் சாப்பிடாமல் ஒதுங்கியிருந்த சில நாய்களைப் பார்த்து,‛ என்ன வெள்ளை என்ன கோபம் வா வந்து சாப்பிடு' என்று அருகில் அழைத்து ஊட்டியும் விட்டார் இதே போல இன்னும் சில நாய்களை பெயர் சொல்லி அழைத்து அவைகளையும் சாப்பிட வைத்தார்.
நாய்கள் சாப்பிடும் இடத்தில் நிறைய காக்கைகளும் வந்து சிந்திய உணவுகளை சாப்பிட்டன.
மனிதர்களை மனிதர்களே பார்த்துக் கொள்வதே அருகிப் போய்க் கொண்டு இருக்கும் இந்த கொரோனா காலத்தில் ஆள் அரவமற்ற அத்துவானத்தில் தெரு நாய்களுக்கு ஒருவர் உணவு கொண்டு வந்து கொடுக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருந்தது
யார் அவர்?
எஸ்.ராஜேஷ்
சென்னையில் போக்கு வரத்து போலீஸ்காரரக பணியாற்றுகிறார்.
சுத்தமான சீருடையுடன், வெயிலுக்கு ஒதுங்காமல் நடு ரோட்டில் நின்று வித்தியாசமான அசைவுகளுடன் மிகவும் சுறுசுறுப்பாக போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் இவர் இதன் காரணமாக பொதுமக்களிடம் உயரதிகாரிகளிடமும் நல்ல பெயர் பெற்று இருப்பவர்.
சிறு வயது முதலே வளர்ப்பு பிராணிகள் மீது பாசம் உண்டு அதிலும் தெரு நாய்கள் என்றால் பிரியம் அதிகம் அவைகளுக்கு அவ்வப்போது பிஸ்கட் சாப்பாடு வாங்கிப் போடுவார் அந்த பழக்கம்தான் இப்போது அதிகமாகி உள்ளது.
இவர் தன் வீடு இருக்கும் ராயபுரம் பகுதியில் உள்ள அசைவ ஒட்டல்களில் பிளாஸ்டிக் வாளிகள் கொடுத்து வைத்துள்ளார் மீதமாகும் சாப்பாட்டை இந்த வாளியில் சேகரித்துக் கொண்டு ராயபுரத்தில் துவங்கி காசி மேடு வரை பயணித்து ஆங்காங்கே உள்ள நாய்களுக்கு கொடுப்பார். தனது ட்யூட்டிக்கு இடையூறு இல்லாத நேரத்தில் இந்த உணவு சேவையை வைத்துக் கொள்கிறார்.
உடம்புக்கு முடியாத நாய்களை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்வார் மருத்துவர்கள் சில நாட்கள் வீட்டில் வைத்து பராமரிக்கவேண்டும் என்றால் தனது வீட்டில் வைத்து பராமரித்து குணமான பின் அதன் இடத்தில் கொண்டு போய் விடுவார் இவரது இந்த சேவைக்கு இவரது மனைவி ஸ்ரீலட்சுமி மிகவும் உதவியாக இருக்கிறார்.
நாய்களுக்கு உணவு போட வேண்டும் என்பதற்காகவே வெளியூர் போவதை எல்லாம் தவிர்த்துவிடுவார்.கொரோனா காரணமாக ஒட்டல்கள் எல்லாம் மூடிவிட்ட நிலையில் தனது வீட்டிலேயே சமைத்து கொண்டு போய் சாப்பாடு கொடுத்து வருகிறார் ,அரிசி பற்றாக்குறை வந்த போது இவர் குடியிருக்கும் போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் பலரும் அரசி கொடுத்து உதவி வருகின்றனர்.
இவைகளை தெரு நாய்கள் என்று சாதாரணமாக நினைத்து விடவேண்டும் இவைகள் பைரவரின் அம்சம் பாசம் காட்டுவதிலும் பாதுகாப்பு தருவதிலும் இவைகளுக்கு நிகர் இவைதான் முறைப்படி பயிற்சி கொடுத்தால் ஏடிஎம் சென்டரில் இருந்து நாட்டின் எல்லைவரை இவைகள் பாதுகாக்க வல்லவை.
உலகின் சிறந்த போலீஸ் தமிழக போலீஸ் என்ற பெயர் எடுக்க வேண்டும் ,ஒய்வு பெற்ற பிறகு ஊதியம் இல்லாமல் சிரமப்படும் முதியோர்களுக்கு உதவ வேண்டும்,வறுமை இல்லாத தேசம் உருவாக வேண்டும் என்பது போன்ற உயர்ந்த லட்சியங்களையும் கொண்டுள்ளார்.
தெருநாய்களுக்கு தாயாக இருந்து சேவை செய்யும் காவலர் ராஜேசுடன் பேச விரும்புவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்:8056186068.
-எல்.முருகராஜ்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Alagar Sokkar - Dindigul,இந்தியா
29-ஜூன்-202015:38:33 IST Report Abuse
Alagar Sokkar உங்கள் உதவிக்கு மிக்க நன்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X