கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேசன்: ஐகோர்ட் கிளை உத்தரவு

Updated : ஜூன் 29, 2020 | Added : ஜூன் 29, 2020 | கருத்துகள் (40)
Share
Advertisement
சாத்தான்குளம், தந்தை, மகன், போலீஸ்ஸ்டேசன், வருவாய்த்துறை,  ஐகோர்ட் மதுரை கிளை,உயர்நீதிமன்ற மதுரை கிளை, ஐகோர்ட், sathankulam police station, tuticorin collector, HC bench, Madurai branch, sathankulam, jayaraj, bennix, tamil nadu, tn news, madurai, Sathankulam incident, Thoothukudi Collector, Thoothukudi, court, high court, madurai high court bench

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக நீதிபதி விசாரணைக்கு போலீசார் ஒத்துழைக்கவில்லை. இதனால், போலீஸ் ஸ்டேசனை வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், 60; மகன் பென்னிக்ஸ், 31, ஊரடங்கு காலத்தில் கடையை திறந்ததாக கூறி போலீசார் கைது செய்தனர். கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். அவர்களை போலீசார் தாக்கியதில், படுகாயமடைந்த அவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, இந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.


latest tamil news


இது தொடர்பான வழக்கை இன்று மீண்டும் விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, தந்தை மற்றும் மகன் மரணம் தொடர்பான மாஜிஸ்திரேட் விசாரணைக்கு, போலீசார் ஒத்துழைக்கவில்லை. வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேசன் கொண்டு வர வேண்டும். அந்த போலீஸ் ஸ்டேசனுக்கு வருவாய்த்துறை அதிகாரியை பொறுப்பு அதிகாரியாக நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Varun Ramesh - Chennai,இந்தியா
29-ஜூன்-202020:20:34 IST Report Abuse
Varun Ramesh விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பது குற்றம் நடந்திருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது. உடல் தகுதி மட்டுமே காவலர்களின் ஒரே தகுதியாக இருக்கக்கூடாது. இந்த போலீஸ் நண்பர்கள் என்பது எது? அல்லது யார்? இப்படிப்பட்டவர்களை காவல் நிலையம் உதவிக்கு அழைத்துக்கொள்ள சட்டம் அனுமதிக்கிறதா? தாசில்தார், மாவட்ட ஆட்சியாளர், பத்திர பதிவுத்துறை இதுபோன்ற அலுவலகங்களில் casual labour அந்தஸ்த்தில் எவ்வித அரசு அங்கீகாரமும் பெறாதவர்கள் பணி செய்வதைப்போல காவல் துறையிலும் இது போன்ற நடைமுறை பின்பற்றப்படுவது ஏன்? காவலர்களும் தாங்களே ஊதியம் கொடுத்து இப்படிப்பட்டவர்களை பணியில் அமர்த்துவது அத்துமீறல்களை அரங்கேற்றுவதற்குத்தான். அரசிடமும் காவல் துறை தலைவரிடமும் மாண்புமிகு நீதி மன்றம் விளக்கம் கேட்கவேண்டும்.
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
29-ஜூன்-202018:55:50 IST Report Abuse
Chandramoulli பிரிவினைவாதிகளும், மதவாதிகளும் , திருட்டு கும்பலும் , உருப்படாத அரசியல் கட்சிகளும் , தொலைக்காட்சி ஊடகங்களும் , எதை செய்ய வேண்டும் என்று நினைத்தார்களோ அது இவர்களின் மூலமாக நிறைவேற்றி உள்ளார்கள் . ஒரு கட்சி தலைவர் சிபிஐ என்ன வானத்தில் இருந்து வந்தவர்களா அல்லது இரண்டு கொம்பு உள்ளவர்களா என்று கேள்வி எழுப்பியவர் . இன்று தமிழகத்தில் அத்துணை ஊடகங்கள் எதிர் கட்சிகளின் கையில் உள்ளது. அரசு தும்மினால் கூட பிரேக்கிங் நியூஸ் போடும் அவலம்கெட்ட தொலைக்காட்சி ஊடகங்கள் இருக்கும் வரை தமிழகம் முன்னேற வாய்ப்பே இல்லை . லத்தி ஒன்று தான் ஊடகங்களுக்கு கொடுக்கப்படவில்லை .
Rate this:
Cancel
svs - yaadum oore,இந்தியா
29-ஜூன்-202018:50:55 IST Report Abuse
svs //...போலீஸ் ஸ்டேஷனை CRPF இடம் ஒப்படைப்பதா. சென்னையில் ஒப்படைத்தது HC...//....ஹை கோர்ட் CRPF இல்லை ...அது CISF ....தமிழ் நாட்டில் எல்லா போலீஸ் ஸ்டேஷன் அந்தந்த ஏரியா ஆளும் கட்சி , எதிர்க்கட்சி வட்ட செயலர் கமிட்டி அமைத்து மேற்பார்வை செய்ய செய்யலாம் ...பகுதி செயலாளர் இந்த கமிட்டி செயல்பாடு பற்றி வெள்ளை அறிக்கை மாவட்ட செயலரிடம் தாக்கல் செய்து அது கட்சி தலைமை மூலம் கோர்ட்டில் சரி பார்த்து மறு தாக்கல் செய்ய சொல்லலாம் ...இப்படி செய்தால் எந்த குழப்பமும் வராது .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X