பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்தாது மருத்துவக் குழு

Updated : ஜூன் 29, 2020 | Added : ஜூன் 29, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement
சென்னை: ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதல்வரிடம் பரிந்துரைக்கவில்லை எனவும், ஊரடங்கு மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்தாது எனவும் இபிஎஸ் உடனான ஆலோசனைக்கு பிறகு மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.கொரோனா நோயை கட்டுப்படுத்த அரசுக்கு ஆலோசனைகள் வழங்க மருத்துவ நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் ஊரடங்கை நீட்டிப்பதற்கு முன் மருத்துவ நிபுணர் குழுவினருடன்
மருத்துவக்குழு, தமிழகம், ஆலோசனை, முதல்வர், இபிஎஸ், ஊரடங்கு, நீட்டிப்பு, ஆலோசனை, Medical expert committee, lockdown, lockdown restriction, coronavirus, corona, covid-19, coronavirus outbreak, covid-19 pandemic, medical team, tamil nadu, tn news, doctors, tamil nadu, cm, tn cm, chief minister, eps, palanisamy, new cornavirus cases,

சென்னை: ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதல்வரிடம் பரிந்துரைக்கவில்லை எனவும், ஊரடங்கு மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்தாது எனவும் இபிஎஸ் உடனான ஆலோசனைக்கு பிறகு மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.

கொரோனா நோயை கட்டுப்படுத்த அரசுக்கு ஆலோசனைகள் வழங்க மருத்துவ நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் ஊரடங்கை நீட்டிப்பதற்கு முன் மருத்துவ நிபுணர் குழுவினருடன் முதல்வர் இபிஎஸ் ஆலோசனை நடத்தி அவர்கள் கூறும் கருத்துக்கள் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிப்பை அறிவித்து வருகிறார். அந்த வகையில் நாளை (ஜூன் 30) ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவினருடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.


latest tamil news


ஆலோசனைக்கு பிறகு மருத்துவக்குழுவினர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் பரிசோதனைகளை அதிகரிக்க பரிந்துரை செய்துள்ளோம். கடந்த 2 வாரங்களை பார்க்கையில் திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலையில் பாதிப்பு இரட்டிப்பாகியுள்ளது. இதனால் அங்கு பரிசோதனைகளை மேலும் அதிகரிக்க வேண்டும். சென்னையில் சென்னையில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் வேகம் குறைந்துள்ளது நல்ல அறிகுறியாகும். சென்னையில் தினமும் 10 ஆயிரம் சோதனைகள் செய்யப்படுகிறது. சோதனைகள் அதிகரித்தால் தான் பாதிப்பு எண்ணிக்கை உயருகிறது. சோதனைகள் அதிகரிப்பதால் பாதித்தோரை வேகமாக கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்த முடிகிறது.


latest tamil news


இதனால் மற்றவர்களுக்கு பரவுதலையும் தடுக்க முடிகிறது. இந்தியாவிலேயே அதிக சோதனைகள் தமிழகத்தில் தான் செய்யப்பட்டுள்ளன. மேலும், இறப்பு விகிதமும் இங்கு தான் குறைவாக உள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வரிடம் பரிந்துரைக்கவில்லை. ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு தீர்வல்ல, அது மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்தாது. அனைத்து மாவட்டங்களிலும் நீட்டிப்பு தேவையில்லை. பொது போக்குவரத்தை கட்டுப்பாடுடன் வைக்க வேண்டும் என பரிந்துரைத்தோம். ஏனெனில் பொது போக்குவரத்தால் பாதிப்பு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களை விட 30 சதவீதம் படுக்கை வசதி அதிகமாக இருக்க வேண்டும். தமிழகத்தில் 80 சதவீதத்தினருக்கும் மேலானவர்களுக்கு லேசான அறிகுறிகளே உள்ளது. அதனால் பயம் வேண்டாம். சுவை, மணம் தெரியவில்லை எனில் காய்ச்சல் மையத்திற்கு சென்று சோதனை செய்து கொள்ளுங்கள். அறிகுறிகள் தென்பட்டால் தனிமைப்படுத்தி கொள்ளுங்கள். மாஸ்க் அணியாமல் வெளியே வராதீர்கள். கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
30-ஜூன்-202016:49:34 IST Report Abuse
மலரின் மகள் ஊரடங்கு என்பதை தேவையில்லாத ஒன்று என்றும் அந்த கலாச்சாரம் தொடர்ந்து கொண்டே வருவது வேதனை என்றும் தொடர்ந்து எழுதுகிறோம். மருத்துவக்குழு எதற்காக ஊரடங்கை விதிப்பதால் ஏற்படும் பொருளாதார சமூக பிரச்சினைகளை பற்றி யோசிக்கிறது. அவர்களின் பரிந்துரையில் பாதுகாப்பாக எப்படி மக்கள் இருக்கவேண்டும், அரசு என்ன விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். தற்போதைய மருத்துவம் சார்ந்த நடவடிக்கையின் வெற்றி தோல்வி மற்றும் அதை எப்படி மேலும் சிறப்பாக செய்வது என்பது பற்றியும் எந்த விதமான கிருமி நாசினிகள் எத்துணை முறை அரசு பயன்படுத்தவேண்டும் என்பது போன்று பல்வேறு விதமான தகவல்களை அரசுக்கு பரிந்துரைக்கத்தான் அவர்கள் கடைமை பட்டிருக்கிறார்கள். அவர்களின் பரிந்துரைகளை அப்படியே ஏற்கவேண்டும் என்றெல்லாம் ஒன்றுமில்லை, அரசு பல கேள்விகள் விளக்கங்கள் கேட்டு தெளிவு பெற்று அதை மக்கள் பிரதிநிதி குழுமூலம் ஆய்ந்து உடனடியாக என்ன நடவடிக்கை எடுக்கவேண்டுமோ அதை செய்யவேண்டும். இப்போது என்னவோ அனைத்தையுமே மருத்துவ குழு தான் செய்வது போல ஒரு தோற்றம் வருகிறதே? ஒவ்வொரு மாவட்டத்திலும் போதுமான மருத்துவ வசதிகள் இருக்கிறதா? மருந்துகள் இருக்கிறதா? மருத்தவுர் துணை மருத்துவர்கள் போன்று பலருக்கு என்னவிதமான பிரச்சினைகள் அவர்களுக்கு தேவையான ஓய்வு மற்றும் பாதுகாப்பு சாதனைகள் அளிக்கப்படுகிறதா என்ரீல்லாம் மருத்துவ குழு ஆய்ந்து அறிக்கை தரலாம். எஸ்பிர்ட் குழுவில் அனைவரும் அவரவர் உடைக்கு மேட்சாக மாஸ்க் அணிந்திருக்கிறார்கள். தெளிவாக தெரிகிறது போட்டோவில்.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
29-ஜூன்-202021:14:13 IST Report Abuse
S. Narayanan ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா அறிகுறி என்றால் அந்த குடும்பம் முழுவதையும் தனிமை படுத்த வேண்டும் என்பது போன்ற கேவலமான அறிவிப்புகள் மக்கள் ஏற்க தயாரில்லை. மேலும் இது அறிகுறி இல்லாதவர்களை தேவை இல்லாமல் முடக்குவதாக இருக்கிறது. அதனால் அறிகுறி இருப்பவர்களுக்கும் பய உணர்ச்சி உண்டாக்காமல் நோயாளிகளை கையாண்டால் கொரோனா விரைவில் ஒழியும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
Rate this:
Cancel
ank -  ( Posted via: Dinamalar Android App )
29-ஜூன்-202019:02:31 IST Report Abuse
ank மக்கள்கிட்ட பொறுப்புகள் கிடையாது எங்க போனாலும் சமூக இடைவெளி என்பதே கிடையாது அரசு எவ்வளவுதான் சொன்னாலும் மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த நோயை வெல்ல முடியாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X