பொது செய்தி

இந்தியா

ஆயிரக்கணக்கானோருக்கு வேலை தரப்போகும் இன்டர்நெட் கம்பெனிகள்

Updated : ஜூன் 29, 2020 | Added : ஜூன் 29, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி : ஊரடங்கு காலத்தில் பொது மக்கள் இணையதளம் மூலம் கிடைக்கும் சேவைகளை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதனால், இணையதள நிறுவனங்களில் ஆயிரகணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது.அமேசான் இந்தியா நிறுவனமானது, நுகர்வோர் சேவைக்காக, ஐதராபாத், புனே, கோவை, நொய்டா, கோல்கட்டா, ஜெய்ப்பூர், சண்டிகர், மங்களூரு, இந்தூர், போபால் மற்றும் லக்னோ நகரங்களில் 20 ஆயிரம் பேரை தேர்வு
ஊரடங்கு, வேலைவாய்ப்பு, இன்டர்நெட் நிறுவனங்கள்,  ஆட்கள் தேர்வு, பணி, வேலை, internet, internet companies, india, online services, surging demand for online services, nationwide lockdown, coronavirus, corona, covid-19, coronavirus outbreak, covid-19 pandemic, lockdown extension, online marketplace, Amazon India, Hyderabad, Pune, Coimbatore, Noida, Kolkata, Jaipur, Chandigarh, Mangaluru, Indore, Bhopal, Lucknow, Grofers (e-grocery segment), Paytm Mall (e-commerce), BharatPe (financial technology), Licious (online meat delivery), NoBroker.com (online real estate)

புதுடில்லி : ஊரடங்கு காலத்தில் பொது மக்கள் இணையதளம் மூலம் கிடைக்கும் சேவைகளை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதனால், இணையதள நிறுவனங்களில் ஆயிரகணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது.

அமேசான் இந்தியா நிறுவனமானது, நுகர்வோர் சேவைக்காக, ஐதராபாத், புனே, கோவை, நொய்டா, கோல்கட்டா, ஜெய்ப்பூர், சண்டிகர், மங்களூரு, இந்தூர், போபால் மற்றும் லக்னோ நகரங்களில் 20 ஆயிரம் பேரை தேர்வு செய்ய போவதாக அறிவித்துள்ளது.இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: புதிதாக தேர்வு செய்யப்படுபவர்கள், இமெயில், சமூக வலைதளங்கள் மற்றும் போன் மூலம் நுகர்வோருக்கு உதவி செய்ய வேண்டும். 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன், ஆங்கிலம், ஹிந்தில, தமிழ், தெலுங்கு அல்லது கன்னட மொழிகளில் புலமை பெற்றிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.


latest tamil newsஊரடங்கு காலத்தில், பல இணையதள நிறுவனங்கள் வேலையில் இருந்து ஆட்களை குறைத்து வரும் நிலையில், அமேசான் இந்தியாவை பின்பற்றி மற்ற இணையதள நிறுவனங்களான பிக் பாஸ்கெட், கோபர்ஸ்( ஆன்லைனில் மளிகை பொருள் விற்கும் நிறுவுனம்) பேடிஎம் மால், பாரத் பே, லிசியாஸ், நோ புரோக்கர். காம், இகாம் எக்ஸ்பிரஸ் ஆகிய நிறுவனங்களும் ஆட்களை தேர்வு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

தனது தலைமை அலுவலகத்தை நொய்டாவில் இருந்து பெங்களூருவுக்கு மாற்றியுள்ள பேடிஎம் மால், நிறுவனம், தொழிலை விரிவுபடுத்தும் வகையில், தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப துறையில் 300 பேரை தேர்வு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

அமேசான், பிளிப்கார்ட், ஸ்நாப்டீல் ஆகிய இணையதள நிறுவனங்கள் போல் செயல்படும் இகாம் எக்ஸ்பிரஸ் நிறுவனமும் அடுத்த 2 மாதங்களில் 7 ஆயிரம் பேரை தேர்வு செய்ய உள்ளதாகவும், அவர்கள் டில்லி, மும்பை, கோல்கட்டா, பெங்களூரு, சென்னை, ஐதராபாத். ஆமதாபாத், சூரத், சண்டிகர், இந்தூர், பாட்னா, லக்னோ, கான்பூர், போபால் மற்றும் ஜெய்ப்பூர் நகரங்களில் இருந்து தேர்வு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. டெலிவரி , கிடங்கு நிர்வாகம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் அறிவியல் துறைகளில் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.

மார்ச் 25 ல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட உடன் இணையதளம் மூலம் கிடைக்கும் சேவைகளை பயன்படுத்த மக்கள் துவங்கினர். இதனால், பிக்பாஸ்கெட் மற்றும் குரோபர்ஸ் ஆகிய நிறுவனங்கள், பொருட்களை வைத்திருக்கும் கிடங்குகளை நிர்வாகம் செய்யவும் பொருட்களை விநியோகம் செய்வதற்கும் ஊழியர்களை அதிகரிக்கும் கட்டாயம் ஏற்பட்டது. பிக்பாஸ்கெட் நிறுவனம் 10 ஆயிரம் ஊழியர்களை சேர்க்க திட்டமிடும் சூழ்நிலையில், குரோபர்ஸ் நிறுவனம் 2 ஆயிரம் பேரை தேர்வு செய்ய உள்ளது.

ஆன்லைன் ரியல் எஸ்டேட் நிறுவனமான நோபுரோக்கர்.டாம் நிறுவனம், தனது மார்க்கெட்டிங், வணிகம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளுக்காக 100 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதேபோல், ஆன்லைன் மூலம் இறைச்சி விற்கும் நிறுவனமான லிசியோஸ் நிறுவனம், ஊரடங்கு காலத்தில் 50 சதவீத ஊழியர்களை நீக்கிய நிலையில், தற்போது, 300 பேரை தேர்வு செய்துள்ளது.

அதேபோல், உபெர் இந்தியா, ஒலா, ஜோமெட்டா, ஸ்விக்கி உள்ளிட்ட நிறுவனங்களில்4000 பேரை குறைக்க உள்ளதாக அறிவித்த நிலையில், அங்கும் புதிதாக ஆட்கள் தேர்வு மற்றும் பழைய ஊழியர்கள் மீண்டும் வேலைக்கு திரும்புவதும் நடந்து கொண்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
29-ஜூன்-202021:38:21 IST Report Abuse
S. Narayanan ஆயிரக்கணக்கானவர்களுக்கு மட்டும் தானா.
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
29-ஜூன்-202020:04:51 IST Report Abuse
பாமரன் ஆயிரக்கணக்கில் சம்பளத்தோட ஆயிரக்கணக்கான வேலைகள் உருவாவதை சத்த்த்த்தமா ஜிஜியின் தெறமையால வந்ததுன்னு சொல்லனும்... அதேநேரத்தில் லட்சக்கணக்கான ரூபாய் சம்பளத்தில் இருந்த லட்சக்கணக்கான வேலைகள் போனதை பற்றி யாராவது கேட்டால் மியாவ் மியாவ் மியாவ்ன்னு ஒளிஞ்சிக்கிட்டு காங் நேரு டீம்காதான் காரணம்னு சொல்லோனும்...
Rate this:
Cancel
INNER VOICE - MUMBAI,இந்தியா
29-ஜூன்-202019:51:04 IST Report Abuse
INNER VOICE திருவனந்தபுரம் கிடையாதா?அங்கு பெரிய டெக்நோ பார்க் இருக்கிறதே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X