சீனாவுக்கு கண்டனம் தெரிவித்த ஸ்டாலின்; பாராட்டிய பாஜ.,

Updated : ஜூன் 29, 2020 | Added : ஜூன் 29, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement
BJP, Appreciates, Stalin, India, China, Issue, border issue, india-china stand off, dmk, tamil nadu, tn news, Muralidhar Rao, DMK president, Dravida Munnetra Kazhagam, eastern ladakh, ladakh,  Stalin for his stand, பாஜ, பாஜக, ஸ்டாலின், பாராட்டு, எல்லை, பிரச்னை

புதுடில்லி: இந்திய வீரர்கள் மீதான சீன ராணுவத்தின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, பிரதமரின் முடிவுகளுக்கு திமுக ஆதரவளிக்கும் என தெரிவித்த ஸ்டாலினை பாஜ., பாராட்டியுள்ளது.

சமீபத்தில், பிரதமர் தலைமையில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சீன பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது. சோனியா, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். 'சீன விவகாரத்தில் பிரதமர் எடுக்கும் முடிவுகளுக்கு, தி.மு.க., ஆதரவு அளிக்கும்' என, ஸ்டாலின் பேசினார். ஆனால், இதே கூட்டத்தில் பேசிய சோனியா, மத்திய அரசை விமர்சித்தார். மோடிக்கு ஆதரவாக ஸ்டாலின் பேசியது, காங்கிரசில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil news


இந்நிலையில் தமிழக பாஜ., ஏற்பாடு செய்த காணொலி பேரணியில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலர் முரளிதரராவ் பேசியதாவது: இந்திய ராணுவ வீரர்கள் இறப்புக்கு காரணமான சீன அரசுக்கு கண்டனம் தெரிவித்த ஸ்டாலினை பாராட்டுகிறேன். ஆனால், சீன ஆதரவு நிலையில் உள்ள ராகுலை ஸ்டாலின் கண்டிக்கவில்லை. சீனாவுக்கு ஆதரவாக உண்மையை திரித்துக்கூறி மக்களை குழப்பும் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும். ராஜிவ் அறக்கட்டளை சீனாவுடன் என்ன ஒப்பந்தம் போட்டது, இந்த அறக்கட்டளைக்கு சீனா ஏன் நன்கொடை அளித்தது என்ற கேள்விகளுக்கு ராகுலிடம் இருந்து பதில் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pandianpillai Pandi - chennai,இந்தியா
30-ஜூன்-202023:22:09 IST Report Abuse
Pandianpillai Pandi பிஜேபி தான் எல்லாவற்றிலும் அரசியல் பார்க்கிறது.இவரின் கேள்வியே தவறு. வெளியுறவு கொள்கையில் மத்திய அரசிற்க்கே எப்போதும் ஆதரவு என்பது அண்ணா காலத்திலே வகுக்கப்பட்ட கொள்கை முடிவு இதில் இலங்கை விவகாரம் பொருந்தாது . என்பதை தலைவர் ஸ்டாலின் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
Rate this:
Cancel
KavikumarRam - Indian,இந்தியா
29-ஜூன்-202021:47:15 IST Report Abuse
KavikumarRam பாராட்டிட்டு ஒரு பத்தடி தள்ளி நிக்கிறது பாஜகவுக்கு நல்லது.
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
29-ஜூன்-202021:14:14 IST Report Abuse
Rajagopal சீனாவின் எதிரி ஜப்பான் பிரதம மந்திரி சுடலை, சீனாவைக் கண்டிப்பது வியப்பில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X