அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைச்சருக்கு கொரோனா இல்லை: குடும்பத்தினர், அதிகாரிகள் நிம்மதி

Updated : ஜூன் 29, 2020 | Added : ஜூன் 29, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
ஆரணி: அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உள்பட அவரது குடும்பத்தை சேர்ந்த ஒன்பது பேருக்கு, கொரோனா தொற்று இல்லை என, பரிசோதனை அறிக்கையில் உறுதியானது.சென்னையில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றால் அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்கள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி முதல்வர் இபிஎஸ் உத்தரவிட்டார். அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை
அமைச்சர், ராமச்சந்திரன், கொரோனா, இல்லை, சோதனை, TN Minister, tamil nadu, tn news, HR&CE Minister, Hindu Religious and Charitable Endowments Minister, Sevoor S. Ramachandran, COVID-19 test result, coronavirus, corona, covid-19, coronavirus outbreak, covid-19 pandemic, corona test, corona news, corona for minister

ஆரணி: அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உள்பட அவரது குடும்பத்தை சேர்ந்த ஒன்பது பேருக்கு, கொரோனா தொற்று இல்லை என, பரிசோதனை அறிக்கையில் உறுதியானது.

சென்னையில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றால் அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்கள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி முதல்வர் இபிஎஸ் உத்தரவிட்டார். அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் 10 நாட்களுக்கு முன்பாக பரிசோதனை செய்தார். அதில், அவருக்கு கொரோனா இல்லை என வந்தது.இந்நிலையில் திருவண்ணாமலையில், கடந்த, 26ல், அமைச்சர் ராமச்சந்திரன், அரசு விழாவை முடித்துக்கொண்டு காரில் வீடு திரும்பினார். அவரது கார் டிரைவருக்கு எடுக்கப்பட்ட சோதனை முடிவில் கொரோனா தொற்று உறுதியானது.


latest tamil news


இதையடுத்து மருத்துவமனையில், அவர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இந்நிலையில் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சத்தில், அமைச்சரும், அவரது குடும்பத்தை சேர்ந்த ஒன்பது பேரும், வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவு நேற்று வந்தது. இதில் அமைச்சர், அவரது குடும்பத்தாருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதியானது. இதனால் அவரது குடும்பத்தினர், அவருடன் நெருக்கமாக இருந்த கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
29-ஜூன்-202019:58:04 IST Report Abuse
பாமரன் இவர்தானே கார் டிரைவருக்கு கொரோனான்னு தெரிஞ்சதும் இறங்கி தலைதெறிக்க ஓடுனார்...???
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
29-ஜூன்-202019:09:57 IST Report Abuse
அசோக்ராஜ் ஓடிப்போன அமைச்சருக்கு ஒன்பதாம் இடத்திலே குரு. அகப்பட்ட டிரைவருக்கு அட்டமத்தில் சனி.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
29-ஜூன்-202018:46:07 IST Report Abuse
தமிழவேல் கொடுத்து வைத்தவர்கள். ரிசல்ட் 2 நாட்களிலேயே வந்துவிட்டது..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X