பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 86 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு; இதுவரை 1,141 பேர் பலி

Updated : ஜூன் 29, 2020 | Added : ஜூன் 29, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
CoronaVirus, Corona Cases, Tamilnadu, Discharge, TN_Corona Updates, TN_Health, TN_Fights Corona, Corona, TN Govt, Covid-19, Positive Cases, new coronavirus cases, corona death, corona spread,corona patients, corona in TN, TN districts, TN news, health, disease, corona in TN, TN fights corona, covid-19 patient, COVID-19 cases in Tamil Nadu, தமிழகம், கொரோனா, வைரஸ், பாதிப்பு, உயிரிழப்பு, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று (ஜூன் 29) ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86,224 ஆக அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 3,949 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 3841 பேர் தமிழகத்தை சேர்ந்தவர். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 108 பேர். இன்று மட்டும் 30,039 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 11 லட்சத்து 40 ஆயிரத்து 441 மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இன்று கொரோனா உறுதியானவர்களில், 2,379 பேர் ஆண்கள், 1,570 பேர் பெண்கள். மொத்தத்தில் கொரோனா பாதித்த, ஆண்களின் எண்ணிக்கை 53,124 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 33,079 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 21 ஆகவும் உள்ளது.


latest tamil news


தமிழகத்தில் 90 ஆய்வகங்கள் (அரசு - 47 மற்றும் தனியார் - 43) உள்ளன. இன்று மட்டும் 2,212 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 749 ஆக உள்ளது.


வயது வாரியாக பாதிப்பு

12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 4,225 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 71 ஆயிரத்து 728 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 10 ஆயிரத்து 271 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் கொரோனா பாதித்த 62 பேர் உயிரிழந்தனர். அதில், 18 பேர் தனியார் மருத்துவமனையிலும், 44 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1,141 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
துயில் விரும்பி - coimbatore,இந்தியா
30-ஜூன்-202010:22:48 IST Report Abuse
துயில் விரும்பி பிற வியாதிகளால் இறப்பவர்கள் பட்டியலையும் வெளியிட்டால் நன்றாக இருக்கும். கடந்த ஆறு மாதங்களில் இறப்பு விகிதம் பெருமளவு குறைந்து இருப்பதாக தகவல். மருத்துவமனை கொள்ளை தேவையற்ற அறுவை சிகிச்சை போன்றவை வெகுவாக குறைந்ததால் இறப்பும் குறைந்து இருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆண்டவன் இருக்கிறான் போல தெரிகிறது.
Rate this:
Cancel
G.Loganathan - Coimbatore,இந்தியா
30-ஜூன்-202003:36:51 IST Report Abuse
G.Loganathan ஒரு மனிதனின் வியாதியை கட்டுப்படுத்த / சிகிச்சைக்கு உட்படுத்திக்கொள்ள அம்மனிதனை தவிர வேறு யாராலும் முடியாது. வியாதியின் தீவிரம், தன்மை, சிகிச்சை, வியாதிக்குட்பட்டவரின் பழக்க வழக்கங்கள் இவைகளை கூறுபவர் ஒரு மருத்துவர் மட்டுமே. அரசு மருத்துவர்களுக்கு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்துவதோடு நிறுத்திக்கொள்ளவேண்டும். தற்போது மருத்துவர்கள் குரல் எங்கும் ஒலிக்கவிலை மாறாக அரசியல் வாதிகள் ஊரடங்கு, கட்டுப்பாடு என்று அபத்தமாக குரல் கொடுக்கிறார்கள். இடையில் சிலர் கொரோனா வை பயன் படுத்தி மக்களை கொடுமைக்கு உள்ளாக்குகிறார்கள். அணைத்து காவல் நிலையங்களிலும் மருத்துவர்களை அமர்த்துங்கள், தேவையான சோதனை உபகரணங்களை வழங்குங்கள். மருத்துவர்களுக்கு தெறியும் நோயாளிகளை குனப்படுத்த. அரசும் அசியல் வாதிகளும் ஆயிரம் வருடம் ஊரடங்கு, கட்டுப்பாடு விதித்தாலும் வியாதிகளை போக்கமுடியாது. தமிழர்களை வாழ விடுங்கள். காவல்துறை ஏவல்துறை ஆகி இப்போது கொலைத்துறை ஆகியுள்ளது. அணைத்து இழிச்செயல்களுக்கும் தமிழக அரசே பொருப்பு. மக்கள் முடிவை சொல்லும் நாட்களும் வரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X