பொது செய்தி

இந்தியா

தாய்க்கு உதவ கிணறு தோண்டிய மகள்: குவியும் பாராட்டு

Updated : ஜூன் 29, 2020 | Added : ஜூன் 29, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
தாய், கிணறு, மகள்,  பாராட்டு, west bengal, Bobita Soren, Dashrath Manjhi, ailing mother, water, access to water, 15-feet well, digs well, home, Nina Soren, anemia, hammer and chisel

கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலத்தில், நோயால் அவதிப்படும் தனது தாயார் தண்ணீருக்காக நீண்ட தூரம் சென்று அவதிப்படுவதை பார்த்த மகள், வீட்டிலேயே 15 அடி ஆழம் கிணறு தோண்டியுள்ளார். அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் துர்காபூர் பகுதியை சேர்ந்தவர் ஹப்னா சோரன், உள்ளூர் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நினா சோரன்(50). இவர்களுக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளார். மூத்த மகள் ஜவுளி தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். மற்றொரு மகள் பபிதா சோரன், புர்துவான் மாவட்டத்தில் அரசியல் அறிவியலில் எம்ஏ பட்டம் முடித்த இவர், தற்போது பிஎட் படித்து வருகிறார். விடுதியில் தங்கி படித்து வருகிறார்.
நினா சோரன் அனிமியா நோயால் அவதிப்பட்டு வந்தார். மேலும் சில உடல்நலக்குறைவும் உள்ளது. இருப்பினும், நீண்ட தூரம் நடந்து சென்று, வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து தண்ணீர் பிடித்து வந்தார். இதனை கண்டு வேதனைப்பட்ட பபிதா, தாயாருக்கு உதவும் வகையில் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என யோசனை செய்தார். வீட்டில் உள்ள காலி இடத்தில் கிணறு தோண்ட முடிவு செய்தார். இதற்கான பணியை கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் துவங்கினார். கிணறு தோண்ட ஆரம்பித்து பாதி பணிகள் நிறைவடைந்த நிலையில், கல்லூரி திறந்தது. இதனால் பணியை பாதியில் நிறுத்திவிட்டு சென்றார். தற்போது ஊரடங்கு காரணமாக விடுமுறை கிடைத்தது. இதனை பயன்படுத்தி, 15 அடி ஆழத்திற்கு கிணறு தோண்டி முடித்துள்ளார். தண்ணீரும் கிடைத்துவிட்டது. தனது பணிக்கு, தனது தந்தை, சகோதரர், சகோதரி உதவியதாக, பபிதா தெரிவித்துள்ளார்.


latest tamil news
முதலில் இந்த செய்தி யாருக்கும் தெரியவில்லை. பின்னர் அரசல், புரசலாக வெளியில் பரவி, மாவட்ட அதிகாரிகள் வரை சென்றது. இதனால், அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. கிணற்றில் மேலும் 30 அடி ஆழம் தோண்டவும், சிமென்ட் தொட்டிகள் அமைக்க உதவி செய்யப்படும் என தெரிவித்துள்ள அதிகாரிகள், லேப்டாப் வழங்கப்படும் எனவும், வேலைவாய்ப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
30-ஜூன்-202006:42:30 IST Report Abuse
NicoleThomson வாழ்த்துக்கள் சகோதரி , சேப்டி முக்கியம்
Rate this:
Cancel
Thalaivar Rasigan - CHENNAI,இந்தியா
29-ஜூன்-202022:55:21 IST Report Abuse
Thalaivar Rasigan இவள் மகள் அல்ல - தாய்
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
29-ஜூன்-202021:34:06 IST Report Abuse
S. Narayanan மாணவ சகோதரியே உங்கள் தாய்மை உணர்ச்சிக்கு எங்கள் மனமுவந்த பாராட்டுக்கள். வாழ்க வளர்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X