சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : ஜூன் 29, 2020
Share
Advertisement


பெருங்காயத்தின் பயன்



உணவில் வாசனைக்காகவும், ஜீரணத்திற்காகவும், சேர்க்கப்படும் பெருங்காயம் ஆயுர்வேத மருத்துவத்தில் உணவியல் மண்டலம் தொடர்பான மருந்துகள் தயாரிக்க பயன்படுகிறது. விவசாயத்தில் பெருங்காயம் பூச்சிகளை கட்டுப்படுத்தவும், காய்ப்புத் திறனை அதிகரிக்கவும் பயன்படுகிறது. இதே அடிப்படையில் மனிதர்களுக்கு பாலியல் உணர்வை துாண்டவும், மலட்டுத் தன்மையை நீக்கவும், நாட்டு மருத்துவத்தில் பெருங்காயம் பரிந்துரை செய்யப்படுகிறது. உடலில் வாயுவால் ஏற்படும் வலியை விரட்டுவதற்கு பெருங்காயம் பயன்படுகிறது.


தகவல் சுரங்கம்



ஏரியை பிரிக்கும் எல்லை


லடாக் யூனியன் பிரதேசத்தில் இமயமலை பகுதியில் 'பாங்காங் ஏரி' அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 14,270 அடி உயரத்தில் இருக்கிறது. இந்த ஏரியின் நடுவே இந்தியா - சீனா எல்லை கட்டுப்பாட்டுக் கோடு அமைந்துள்ளது. சுமார் 60 சதவீத பகுதி சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் பகுதியில் உள்ளது. ஏரியின் அதிகபட்ச அகலம் 5 கி.மீ. இதன் நீளம் 134 கி.மீ. அதிகபட்ச ஆழம் 328 அடி. இதன் பரப்பளவு 700 சதுர கி.மீ. இது உப்பு நீர் ஏரியாக இருந்தாலும், குளிர்காலத்தில் ஏரி நீர் முற்றிலும் உறைந்து பனிக்கட்டியாகி விடும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X