தெலுங்கானாவின் கொரோனா பரிசோதனை ; சுகாதாரதுறை அமைச்சர் எட்டெலா ராஜேந்தர்

Updated : ஜூன் 29, 2020 | Added : ஜூன் 29, 2020
Share
Advertisement

ஐதராபாத் : தெலுங்கானாவில் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை மீண்டும் நாளை முதல் துவங்கும் என அம்மாநில சுகாதாரதுறை அமைச்சர் எட்டெலா ராஜேந்தர் தெரிவித்தார்.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெலுங்கானாவிலும் நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஐதராபாத் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 2 நாட்களுக்கு கொரோனா பரிசோதனையை நிறுத்தி வைப்பதாக மாநில அரசு தெரிவித்திருந்தது. தெலுங்கானாவில் குறைந்த அளவிலான பரிசோதனையே நடத்தப் படுகிறது. பரிசோதனைகளை அதிகரிக்க அரசிற்கு கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் 8,235 மாதிரிகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது நோய் தொற்றை கண்டறிய சந்தேகிக்கப்படும் நபர்களிடமிருந்து நாளை முதல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப் படும் என சுகாதாரதுறை அமைச்சர் எட்டெலா ராஜேந்தர் தெரிவித்தார்.


latest tamil news



மாநிலத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தெலுங்கானாவின் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் பீதி அடைய வேண்டாம். மக்களுக்கு தேவையான சுகாதார நடவடிக்கை தயார்நிலையில் உள்ளன. கொரோனா தொற்று குறித்து சந்தேகிப்பவர்கள் கிங் காய்ச்சல் மருத்துவமனை , உஸ்மானியா பொது மருத்துவமனைகளுக்கு செல்லலாம். அங்கு மாதிரிகள்சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். பரிசோதனையின் முடிவுகள் நேர்மறையாக இருந்தால் (தொற்று உறுதியானால்) காந்தி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை பெறுவார்கள். இல்லையெனில் வீட்டில் தனிமைப்படுத்தப் படுவார்கள். மேலும் வயதானவர்கள் மற்றும் பிற நோய்களை கொண்டவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நோய் பாதிப்பு குறித்து போலியான செய்திகளை நம்ப வேண்டாம். நம்பத்தகுந்த அரசாங்க அதிகாரிகளால் வெளியிடப்படும் செய்திகளை நம்புங்கள். இவ்வாறு எட்டெலா ராஜேந்தர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X