பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஜூலை 5 வரை முழு ஊரடங்கு

Updated : ஜூன் 29, 2020 | Added : ஜூன் 29, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

சென்னை: சென்னை, மதுரை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களில் ஜூலை 5 வரை முழு ஊரடங்கை அமல்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.



latest tamil news



தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. தொடர்ந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்புகளை பதிவு செய்து வந்த தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தொடர்ந்து அதிக பாதிப்புகளை சந்திக்கும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த ஜூன் 19 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மதுரையில் ஜூன் 23 நள்ளிரவு 12 மணி முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.


latest tamil news



இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஜூலை 31 வரை ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் நோயை கட்டுப்படுத்த, அரசுக்கு ஆலோசனைகள் வழங்க, மருத்துவ நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, மதுரை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களில், ஜூலை 5 வரை முழு ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
30-ஜூன்-202004:39:48 IST Report Abuse
Mani . V துக்ளக் தன்னுடைய முட்டாள்தனமான செயல்களால் அனைத்தையும் குட்டிசுவராக்கியதாக வரலாறு சொல்கிறது. அந்த வரலாற்றுச் சம்பவம் திரும்ப வந்து விட்டது. மக்கள் இரண்டு மாதம் கடும் தவமாய் வீட்டுக்குள் அடைந்து கிடந்தார்கள். கொரோனா கிருமி பரவல் குறைந்து வந்த வேளையில், முட்டாள்தனமான முடிவுகளால், தற்சமயம் கொரோனா கிருமி பரவல் உச்சத்தை நெருங்கிக் கொண்டு இருக்கிறது. இனி எத்தனை மாதம் அல்லது எத்தனை வருடம் ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டியிருக்கும்? என்பதை உண்மையான சாமிகள் மட்டுமே அறியும். எப்படியோ தமிழ்நாட்டை அழித்தொழித்த பெருமை இந்த கௌரவ டாக்டர் அண்ட் கோ வையே சாரும்.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
29-ஜூன்-202022:56:25 IST Report Abuse
அசோக்ராஜ் இந்த நாடும் நாட்டுப் பொருளாதாரமும் நாசமாய்ப் போகட்டும்னு முடிவே செஞ்சிட்டாங்க. அரசாங்கமும் கடனாளி. மக்களும் கடனாளி. அரசியல் வியாதியும் அதிகாரியும் போலீஸும் நீதிபதியும் மட்டும் நவீன ஆண்டைகள். அவர்கள் வாழ்ந்தால் போதும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X