சென்னை, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஜூலை 5 வரை முழு ஊரடங்கு| Full lockdown extended in Chennai, Madurai till July 5 | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஜூலை 5 வரை முழு ஊரடங்கு

Updated : ஜூன் 29, 2020 | Added : ஜூன் 29, 2020 | கருத்துகள் (2)
Share
சென்னை: சென்னை, மதுரை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களில் ஜூலை 5 வரை முழு ஊரடங்கை அமல்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. தொடர்ந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்புகளை பதிவு செய்து வந்த தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள்

சென்னை: சென்னை, மதுரை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களில் ஜூலை 5 வரை முழு ஊரடங்கை அமல்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.



latest tamil news



தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. தொடர்ந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்புகளை பதிவு செய்து வந்த தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தொடர்ந்து அதிக பாதிப்புகளை சந்திக்கும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த ஜூன் 19 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மதுரையில் ஜூன் 23 நள்ளிரவு 12 மணி முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.


latest tamil news



இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஜூலை 31 வரை ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் நோயை கட்டுப்படுத்த, அரசுக்கு ஆலோசனைகள் வழங்க, மருத்துவ நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, மதுரை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களில், ஜூலை 5 வரை முழு ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X