பொது செய்தி

இந்தியா

டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன 'ஆப்'களுக்கு அதிரடி தடை

Updated : ஜூன் 29, 2020 | Added : ஜூன் 29, 2020 | கருத்துகள் (40)
Share
Advertisement

புதுடில்லி: லடாக் மோதலை தொடர்ந்து டிக்டாக், ஹலோ, ஷேர் இட், யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன 'ஆப்'களுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.



latest tamil news



கடந்த 15ம் தேதி இரவில், லடாக் அருகே, சீன எல்லையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய - சீன தரப்பு வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டு, பெரும் மோதலாக மாறியது. சீன வீரர்கள், இரும்புத் தடி, இரும்புக் கம்பி, கற்கள் ஆகியவற்றின் மூலம் கொடூரமாக தாக்கியதில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். பதில் தாக்குதலில், சீன வீரர்கள், 43 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. அந்த நாட்டு ராணுவம் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.


latest tamil news



இந்நிலையில் கல்வான் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, டிக்டாக், ஹலோ, ஷேர் இட், யுசி பிரவுசர், மெயில் மாஸ்டர், பேரலல் பேஸ், விவோ வீடியோ, கேம் ஸ்கேனர், எம்ஐ கம்யூனிட்டி, வீகோ வீடியோ, வீசாட், கிளப் பேக்டரி, யூகேம் மேக்கப் உள்ளிட்ட 59 சீன மொபைல் ஆப்களுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
30-ஜூன்-202020:02:16 IST Report Abuse
Visu Iyer விபிஎன் மூலமாக பயன் படுத்த முடியும் தானே.. அதை என்ன செய்வது..
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
30-ஜூன்-202007:36:04 IST Report Abuse
Natarajan Ramanathan நீ இவ்வளவு மக்கா?
Rate this:
Cancel
g.selvaraju - ambattur,இந்தியா
30-ஜூன்-202006:37:54 IST Report Abuse
g.selvaraju tik-tok- ல் என்னா ஆபாசம், நிரந்தர தடை வேண்டும். பிரதமரின் அற்புத நடவடிக்கை. பாராட்டுவோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X