பொது செய்தி

இந்தியா

தெலுங்கானாவில் படுக்கை வசதியுடன் தனிமைப்படுத்துதலுக்கு சிறப்பு ரயில் பெட்டிகள்

Updated : ஜூன் 29, 2020 | Added : ஜூன் 29, 2020
Share
Advertisement
ஐதராபாத் : தெலுங்கானாவில் லேசான கொரோனா பாதித்தவர்களை தனிமைப்படுத்த தென் மத்திய ரயில்வே படுக்கை வசதியுடன் சிறப்பு ரயில்பெட்டிகளை ஏற்பாடு செய்துள்ளது.தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களுக்கு போதிய மருத்துவமனை மற்றும் முகாம்கள் போன்ற வசதிகள் இல்லாததால்

ஐதராபாத் : தெலுங்கானாவில் லேசான கொரோனா பாதித்தவர்களை தனிமைப்படுத்த தென் மத்திய ரயில்வே படுக்கை வசதியுடன் சிறப்பு ரயில்பெட்டிகளை ஏற்பாடு செய்துள்ளது.



latest tamil news



தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களுக்கு போதிய மருத்துவமனை மற்றும் முகாம்கள் போன்ற வசதிகள் இல்லாததால் ரயில்வேயின் உதவியுடன் கொரோனா பாதிப்புகளின் அடிப்படையில் (லேசான, சந்தேகத்திற்குரிய..) பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த சிறப்பு ரயில்பெட்டிகள் தயார்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மாநிலத்திற்கு சுகாதார சேவையை வழங்குவதற்கான ஒரு பகுதியாக, தென் மத்திய ரயில்வே (SCR) மிகவும் லேசான மற்றும் லேசான நோய் பாதிப்புகளுக்கு தனிமைப்படுத்தப்பட்ட பெட்டிகளில் 1000 படுக்கை வசதிகளை வழங்க தயாராக உள்ளது.


latest tamil news



இதற்கு முன்னதாக, தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்காக, ரயில்பெட்டிகளை வழங்க, இந்திய ரயில்வேயிடம் தெலுங்கானா அரசு கோரிக்கை விடுத்துள்ளது. லேசான நோய் பாதிக்கப் பட்டவர்களுக்காக இந்த ரயில் பெட்டிகளை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது. ரயில்வே அதிகாரிகளின் கூற்றுப்படி, 60 தனிமைப்படுத்தும் பெட்டிகள் கச்சிகுடா, செகந்தராபாத் மற்றும் அடிலாபாத் ரயில் நிலையங்களில் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஒவ்வொரு பெட்டியிலும் சுமார் 28 படுக்கைகள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு 2 படுக்கைகள் உள்ளன. தற்செயல் நடவடிக்கையாக 486 பயணிகளை ஏசி அல்லாத தனிமைப் படுத்தும் பெட்டிகளில் மாற்றப்பட்டது.


latest tamil news



இவற்றில் செகந்தராபாத் 120 பெட்டிகளையும், ஐதராபாத் 40 பெட்டிகளையும் மாற்றியது. இந்த ரயில்பெட்டிகளில் நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை வசதிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் செய்யப்பட்டிருக்கும். மாநிலம் தயாரானதுமக, ரயில் பெட்டிகளை வரிசைப் படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். ரயில்பெட்டிகளில் வெப்பத்தை குறைக்க தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் சிறந்த காற்று வசதி தொடர்பாகவும், சில நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X