பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஜூன் 29, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
   இதே நாளில் அன்று

ஜூன், 30, 1912

திருநெல்வேலி அருகில் உள்ள தச்சநல்லுாரில், 1912 ஜூன், 30ல், எழுத்தாளர் மாதவையாவிற்கு மகனாக பிறந்தவர், கிருஷ்ணன். இளம் வயதிலேயே, இவரது குடும்பம், சென்னை மயிலாப்பூரில் குடியேறியது. புகைப்படம், ஓவியம், கட்டுரை என, பல்துறையில் சிறந்து விளங்கினார்.கர்நாடக மாநிலம், பெல்லாரி அருகே இருந்த, சந்துாரின் மகாராஜாவிடம், அரசியல் ஆலோசகராக பணிபுரிந்தார். ஆனாலும், இவரது மனம், இயற்கையின் மீதே ஆர்வம் கொண்டிருந்தது. பறவைகள் சரணாலயமாக, வேடந்தாங்கல் அறிவிக்கப்பட்டதற்கு, இவர் தான் முக்கிய காரணம்.கடந்த, 1950 முதல், இறுதி வரை, 'தி ஸ்டேட்ஸ்மேன்' நாளிதழில், தொடர்ந்து வாரம் இரு முறை, 'கன்ட்ரி நோட் புக்' என்ற தலைப்பில், இயற்கை பற்றி எழுதி வந்தார். இவர் எழுதியவை, 'பறவைகளும் வேடந்தாங்கலும், ஜங்கிள் அண்டு பேக்யார்ட், நைட்ஸ் அண்டு டேஸ்' உள்ளிட்ட நுால்களாக வெளிவந்துள்ளன. இவை, தமிழின் சுற்றுச்சூழல் முன்னோடி படைப்புகளாகப் போற்றப்படுகின்றன. பத்மஸ்ரீ விருது பெற்றார். 1996 பிப்., 18ம் தேதி இயற்கை எய்தினார்.
சூழலியல் ஆர்வலர், மா.கிருஷ்ணன் பிறந்த தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
30-ஜூன்-202008:04:10 IST Report Abuse
Bhaskaran அவரது மழைக்காலமும் குயிலோசையும் நூல் நன்றாக இருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X