சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

மாற்றத்தை ஏற்க சற்று நேரம் பிடிக்கும்!

Added : ஜூன் 29, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
மாற்றத்தை ஏற்க சற்று நேரம் பிடிக்கும்!

பிரபல சினிமா இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன்: எனக்கு தெரிந்து, ரசிகர்கள் என்பவர்கள், எல்லா காலத்திலும், எல்லா தரப்பிற்கும் ஏற்றார் போலத் தான் இருக்கின்றனர். நாம் அவர்களை சரி வர புரிந்து கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.என்னுடைய நம்பிக்கை என்னவென்றால், ரசிகர்களுக்கு இது தான் பிடிக்கும் என நினைத்து, ஒரே மாதிரி படங்களை நாம் கொடுக்கிறோம்.வழக்கமாக ரசிகர்கள் விரும்புவதில் இருந்து, மாறுபட்ட படங்களை கொடுக்கும் போது, அந்தப் படங்கள்,ரசிகர்களை சென்றடைவது கொஞ்சம் கஷ்டம் தான்.
ஏனெனில், அஜித் படம் என்றால், இப்படித் தான் இருக்கும்; விஜய் படம் என்றால், இப்படித் தான் இருக்கும் என, ஒரு மாதிரியை உருவாக்கி வைத்திருக்கிறோம்.

அந்த படத்தின் நாயகனை அறிமுகம் செய்ய வேண்டும் என்றால், காரில் இருந்து இறங்கும் அவன் காலை காட்டி பழகி விட்டோம். அப்படிச் செய்தால் தான் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு இருக்கிறது.அதை மாற்ற முயற்சிக்கும் போது, சில சமயங்களில் நேரம் ஆகிறது. என் அம்மாவுக்கு இப்போது கூட, சீரியல்கள் பிடிக்கின்றன.ஆனால், இணையதளத்தில் வரும் சினிமாக்கள், தொடர்கள் போன்றவை பிடிப்பதில்லை. அவற்றை பிடிக்க, அம்மாவுக்கு கொஞ்சம் காலம் பிடிக்கும். அதே நேரத்தில், பிடிக்காமலேயே போகாது.
ஊரடங்கு இல்லாத நேரத்தில், எல்லா சினிமா படங்களையும், தியேட்டர்களில் சென்று தான் பார்த்து வந்துள்ளேன். பழைய படங்களை மட்டும் தான், 'சிடி'யாக வாங்கி, விரும்பிய நேரத்தில் வீட்டில் பார்த்துள்ளேன்.
ஊரடங்கால் தியேட்டர்கள் மூடிக் கிடப்பதை பார்க்கும் போது, கஷ்டமாக இருக்கிறது. இந்த ெவள்ளிக்கிழமை இந்த படம் ரிலீசாகி இருக்குமே என, என் மனம் தியேட்டர்களையே சுற்றி சுற்றி வருகிறது.இணையதளங்களில் வெளிவரும் படங்கள், தொடர்கள் போன்றவற்றிற்கு, 'சென்சார்' இல்லை தான். அதற்காக, அவற்றில் பாலியல் சமாச்சாரங்களையும், வன்முறையையும் அதிகமாக காட்டக் கூடாது. நமக்கு நாமே, சுய கட்டுப்பாடு விதித்துக் கொள்ள வேண்டும்.தரமான படைப்புகளுக்கு, இணையதளங்களில், நல்ல வரவேற்பு இருக்கிறது. அதற்கு உதாரணம், நான் இயக்கி வெளியிட்ட, 'குயின்!' அதில், அந்த வலுவான கேரக்டர் பேசப்பட வேண்டும் என விரும்பி, அதற்காக தேர்ந்த நடிகையர், நடிகர்களை நடிக்க வைத்தோம்.எப்போதுமே, நல்ல கேரக்டர் படங்கள், இணையதளமாக இருந்தாலும், தியேட்டராக இருந்தாலும், மக்கள் மனதில் நிற்கத் தான் செய்யும்.இனிவரும் காலங்களில், இணையதள தொடர்களை, நல்ல தரமான படைப்பாளிகள் செய்வர்; அப்போது அதன் வெற்றி, இன்னும் சிறப்பாக இருக்கும்!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaitamil - seoul,தென் கொரியா
30-ஜூன்-202016:38:12 IST Report Abuse
unmaitamil சினிமா காரனின் ஆட்டமெல்லாம் முடிந்துவிட்டது. இனி சின்னத்திரையில் தான் சினிமா. சும்மா டைரக்டருக்கு 25,கோடி நடிகனுக்கு 50, கோடியெல்லாம் முடிஞ்சுபோச்சு. இனெல்லாம் 5,அல்லது 6, லட்சம்தான் எல்லாப்பயலுக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X