பொது செய்தி

இந்தியா

எல்லையில் எதிரிகளை விரட்டியடிக்க விமானப்படை தயார்

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூன் 29, 2020 | கருத்துகள் (26)
Share
Advertisement
புதுடில்லி : சீனாவுடனான எல்லைப் பிரச்னை தீவிரமடைந்து வரும் நிலையில், நம் படைகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளன. நம் அரசின் சிறப்பு கோரிக்கையை ஏற்று, ஆறு, 'ரபேல்' ரக விமானங்களை, ஜூலை மாத இறுதியில் அனுப்புவதாக, ஐரோப்பிய நாடான பிரான்ஸ் கூறியுள்ளது.இதைத் தவிர, நட்பு நாடுகளான இஸ்ரேல், ரஷ்யா, அமெரிக்கா ஆகியவையும், ஏற்கனவே செய்த ஒப்பந்தங்களின்படி, ஆயுதங்கள்,
எல்லை, எதிரிகள், விரட்டியடிக்க விமானப்படை தயார்

புதுடில்லி : சீனாவுடனான எல்லைப் பிரச்னை தீவிரமடைந்து வரும் நிலையில், நம் படைகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளன. நம் அரசின் சிறப்பு கோரிக்கையை ஏற்று, ஆறு, 'ரபேல்' ரக விமானங்களை, ஜூலை மாத இறுதியில் அனுப்புவதாக, ஐரோப்பிய நாடான பிரான்ஸ் கூறியுள்ளது.

இதைத் தவிர, நட்பு நாடுகளான இஸ்ரேல், ரஷ்யா, அமெரிக்கா ஆகியவையும், ஏற்கனவே செய்த ஒப்பந்தங்களின்படி, ஆயுதங்கள், தளவாடங்கள் உள்ளிட்டவற்றை விரைந்து அனுப்புவதாக கூறியுள்ளன.
முழு அதிகாரம்இந்தியா - சீனா இடையே யான எல்லைப் பிரச்னை தீவிரமடைந்துள்ளது. இரு தரப்பு ராணுவத்தினரும் மோதிக் கொண்டதில், நம் படையைச் சேர்ந்த, 20 பேர் உயிரிழந்தனர். சீன தரப்பிலும் பெரும் சேதம் ஏற்பட்டது. ராணுவ உயர் அதிகாரிகள் நிலையில் நடந்த பேச்சில், எல்லையில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. ஆனால், சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது.எந்த சூழ்நிலையையும் சந்திக்க தயாராக, நம் ராணுவமும் படைகளை குவித்துள்ளது; முப்படைகளும் தயார் நிலையில் உள்ளன.

சீனா ஏதாவது விஷமத்தனமாக செயல்பட்டால், உடனடியாக எந்த உத்தரவுக்கும் காத்திராமல், பதிலடி கொடுக்க, முப்படைகளுக்கும் மத்திய அரசு முழு அதிகாரம் கொடுத்து உள்ளது.இந்நிலையில், ஏற்கனவே பல நாடுகளுடன் செய்த ஒப்பந்தங்களின்படி, ஆயுதங்கள், தளவாடங்கள், ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை விரைவாக பெறுவதற்கான முயற்சியில், மத்திய அரசு தீவிரமாக இயங்கி வருகிறது.ராணுவம், வெளியுறவு என, முக்கிய அமைச்சர்கள் இந்த நடவடிக்கைகளில் பம்பரமாக செயல்பட்டு வருகின்றனர்.
சிறப்பு கோரிக்கை'டசால்ட் ஏவியேஷன்' நிறுவனம் தயாரிக்கும், 'ரபேல்' ரக போர் விமானங்கள் வாங்குவதற்காக, ஐரோப்பிய நாடான பிரான்சுடன், 2016ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, 36 போர் விமானங்கள், 59 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கப்படுகின்றன. ஒப்பந்தத்தின்படி, 2020, பிப்ரவரிக்குள், 18 விமானங்களும், மீதமுள்ளவை, 2022, மே மாதத்துக்குள், 'டெலிவரி' செய்யப்பட வேண்டும்.நம் விமானப் படைக்கு வலு சேர்க்கும் வகையில், ரபேல் போர் விமானங்களை உடனடியாக டெலிவரி செய்யும்படி, சிறப்பு கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி, தயார் நிலையில் உள்ள ஆறு போர் விமானங்கள், அடுத்த மாத இறுதிக்குள் வந்து சேர உள்ளன.இவற்றைத் தவிர, நான்கு போர் விமானங்கள், நம் விமானப் படை விமானிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக, பிரான்சில் இருக்கும்.


நட்பு நாடுகள்இந்த நிலையில், நட்பு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் ஆகியவையும், ஏற்கனவே செய்த ஒப்பந்தங்களின் அடிப்படையில் அளிக்க வேண்டிய ஆயுதங்கள், தளவாடங்கள் உள்ளிட்டவற்றை, அடுத்த சில வாரங்களுக்குள் அனுப்புவதாக உறுதி அளித்துள்ளன. மேற்காசிய நாடான இஸ்ரேலில் இருந்து, தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கக் கூடிய ஏவுகணைகள் வருகின்றன. தன் இருப்பில் இருந்து இவற்றை அனுப்பி வைப்பதாக, இஸ்ரேல் கூறிஉள்ளது. இவற்றை நேரடியாக, எல்லையில் பயன்படுத்த முடியும்.
நம் படைகளுக்கு, அதிக அளவு ராணுவ ஆயுதங்களை, 'சப்ளை' செய்யும் ரஷ்யாவில், சமீபத்தில் நடந்த வெற்றி தின விழாவில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.
அப்போது, நம் உடனடி தேவைகள் குறித்த பட்டியல் கொடுக்கப்பட்டுஉள்ளது.

ஏற்கனவே செய்த ஒப்பந்தங்களின்படி, 7,500 கோடி ரூபாய் மதிப்பு உள்ள ஆயுதங்கள், தளவாடங்கள், ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை, சில வாரங்களுக்குள் அனுப்புவதாக, ரஷ்யா நட்புக்கரம் நீட்டியுள்ளது.நம் படையில் உள்ள பீரங்கிகள், போர் விமானங்கள் ஆகியவற்றில் பெரும்பாலானவை, ரஷ்ய தயாரிப்புகளே. அதனால், அவற்றில் பயன்படுத்தப்படக் கூடிய ஆயுதங்கள், குண்டுகள் அதிக அளவில் வர உள்ளன.

அமெரிக்கா, பல்வேறு ஆயுதங்களை அனுப்பி வைப்பதாக உறுதியளித்து உள்ளது.குறிப்பாக, 40 கி.மீ., தொலைவு வரை தாக்கக் கூடிய பீரங்கிகளுக்கான குண்டுகள், தோட்டாக்கள் வர உள்ளன. இவற்றைத் தவிர, உளவுத் தகவல்கள், சாட்டிலைட் படங்கள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்வதாக, அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.தற்போது ஏற்பட்டுள்ள எல்லைப் பிரச்னை தீவிரம்அடைந்தாலும் சரி அல்லது சுமுகமாக முடிந்தாலும், எதிர்கால தேவையைக் கருதி, நம் படைகளை வலுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும், சத்தமில்லாமல் சரியாக திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.


தொடரும் ஆலோசனைகள்எல்லையில் பதற்றம் தொடரும் நிலையில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவானே, கடற்படை தலைமை தளபதி கரம்பிர் சிங் ஆகியோருடன், ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங், நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, எல்லையில் உள்ள நிலவரம் குறித்தும், படைகளின் தயார் நிலை குறித்தும் விவாதிக்கப் பட்டது.சீனாவுடன் எல்லைப் பிரச்னையைத் தொடர்ந்து, சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோஷம் பல்வேறு தரப்பில் எழுந்து உள்ளது. இந்த நிலையில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோருடன், உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஆலோசனை நடத்தினார். ஆனால், இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது தொடர்பாக, எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.இந்நிலையில், எல்லையில் பதற்றத்தை தணித்து, படைகளை விலக்கிக் கொள்வது குறித்து, இரு நாட்டு ராணுவத்தின் லெப்டினென்ட் ஜெனரல் நிலையிலான மூன்றாம் கட்டப் பேச்சு, இன்று நடக்கவுள்ளது.


பறக்கும் பீரங்கிகள்எல்லையில், சீனாவின் மிரட்டலுக்கு பயப்படாமல், அதை மிரட்ட வைக்கும் வகையில், நம் ராணுவம் மிக வேகமாக ஆயுதங்களையும், தளவாடங்களையும் கொண்டு சேர்த்துள்ளது.மலைப்பாங்கான, கரடுமுரடான பகுதிக்கு இவ்வளவு வேகமாக ஆயுதங்கள் வந்து சேர்ந்ததற்கு, நம் விமானப் படை மிக முக்கியமான காரணமாகும். விமானப் படையின், 'சி - 17 குளோப்மாஸ்டர்' என்ற சரக்கு ஏற்றிச் செல்லும் விமானம், தொடர்ந்து எல்லைக்கு இயக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, அதிநவீன, 'டி - 90' பீரங்கிகளை லடாக் எல்லைக்கு எடுத்துச் சென்ற விமானப் படையின் திறமை, புல்லரிக்க வைக்கும். இந்த பீரங்கியின் எடை, 46 டன்னாகும். இந்த, சி - 17 விமானத்தில், 77 டன்கள் வரை எடுத்துச் செல்ல முடியும்.நம் விமானப் படையில், 1980களில் இருந்து, 'ஐ.எல்., 76' மற்றும் 'ஏ.என்., 32' ஆகிய சரக்கு விமானங்களே பயன்படுத்தப்பட்டு வந்தன. இதில், ஐ.எல்., 76 விமானத்தில், அதிகபட்சம், 45 டன் மட்டுமே எடுத்துச் செல்ல முடியும்.பிரதமர் மோடி தலைமையிலான அரசு மத்தியில் அமைந்த பிறகே, சி - 17 குளோப்மாஸ்டர் உள்ளிட்ட அதிக எடையை சுமந்து செல்லும் சரக்கு விமானங்கள் வாங்கப்பட்டன. அவை, தற்போது எல்லையில் கைகொடுக்கின்றன.ஏற்கனவே உள்ள விமானங்கள், மற்ற ஆயுதங்கள் மற்றும் வீரர்களை அழைத்துச் செல்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன. இதனால், மிகக் குறைந்த நேரத்தில், ஒரு மிகப் பெரிய படையே, எல்லையில் குவிக்க முடிந்தது.இதைத் தவிர, எல்லை வரை செல்வதற்காக, சாலைகள் அமைக்கப்பட்டதும், இந்த நேரத்தில் மிகப் பெரிய அளவில் பயனுள்ளதாக அமைந்து உள்ளது. ஸ்ரீநகர் - லே மற்றும் மணாலி - லே சாலை வழியாகவும் முக்கிய ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.


ஜப்பானுடன் கடல் பயிற்சிசீனாவுடனான எல்லைப் பிரச்னையைத் தொடர்ந்து, நம் படைகளை வலிமைபடுத்தும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இது ஒரு புறம் இருக்க, மற்ற நாடுகளுடனான கூட்டுப் பயிற்சி
யிலும் நம் படைகள் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, ஜப்பான் கடற்படையுடன் இணைந்து, நம் கடற்படை, இந்தியப் பெருங்கடல் பகுதியில் போர் ஒத்திகை மற்றும் பயிற்சியில், நேற்று ஈடுபட்டது.அதேபோல், ஜப்பான் மற்றும் அமெரிக்க கடற்படைகளுடன் இணைந்து, கடல் பகுதியில் ரோந்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கடற்படை தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் மாந்தர்தம் நிறைகாக்கும் காப்பே தலை நட்பும் பரஸ்பர நம்பிக்கையும் இருக்குமானால் கதவும் வேண்டாம் பூட்டும் வேண்டாம்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
30-ஜூன்-202017:46:04 IST Report Abuse
sankaseshan அ வு ரங்கா சி பின் வரலாறு முடிக்க பட்டு வருகிறது முதல் மாற்றம் கலாமின் பெயர் சூட்ட பட்டுள்ளது
Rate this:
30-ஜூன்-202020:15:20 IST Report Abuse
ஸ்டாலின் ::திருவிளையாடல் படத்தில் ஒரு காட்சி கேள்விகளை நீ கேட்கிறாயா அல்லது நான் கேட்கட்டுமா . அதற்கு பதில் கூறும் நாகேஷ் நானே கேட்கிறேன் எனக்கு கேட்க மட்டும்தான் தெரியும் என்பார் அந்த டயலாக் இப்பொழுது பி ஜே பி க்கு தான் சரியாக இருக்கிறது...
Rate this:
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
30-ஜூன்-202016:46:31 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam சீனாவை முறையாகக் கையாள வேண்டும். அதன் படை பலத்தை மட்டுமல்ல, பொருளாதாரத்தையும் நசுக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X