'பெட்ரோல் விலையை உயர்த்தி பணம் பறிப்பதா?'

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூன் 29, 2020 | கருத்துகள் (57)
Share
Advertisement
'பெட்ரோல் விலை,உயர்த்தி பணம் பறிப்பதா?'

புதுடில்லி : ''பெட்ரோல் விலையை உயர்த்தி, மக்களிடமிருந்து மத்திய அரசு பணத்தை பறிக்கிறது. உடனடியாக, பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்,'' என, காங்கிரஸ் தலைவர் சோனியா கூறியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, காங்கிரஸ் சார்பில், நேற்று நாடு தழுவிய போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, காங்கிரஸ் தலைவர் சோனியா, 'வீடியோ' வாயிலாக கூறியுள்ளதாவது:ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதற்கு பின், 22 முறை, மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி உள்ளது. கொரோனா, ஊரடங்கு போன்ற நெருக்கடியான நேரத்தில், மக்களுக்கு உதவுவது தான் மத்திய அரசின் பணி. ஆனால், இந்த நெருக்கடியான நேரத்தில் கூட பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை உயர்த்தி, மக்களிடமிருந்து மத்திய அரசு பணத்தைப் பறிக்கிறது.


வாக்குறுதிபெட்ரோல் விலை உயர்வு, மக்களின் அன்றாட வாழ்வை, பெரும் நெருக்கடியில் தள்ளியுள்ளது.உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலையை, மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து, தற்போது வரை, பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 9 ரூபாயும், டீசல் விலை, 11 ரூபாயும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த, 2014ல், மோடி தலைமையிலான அரசு பதவியேற்றதில் இருந்து, கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக, அரசு, 18 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.பஞ்சாப் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அமரீந்தர் சிங் கூறியதாவது:சீன நிறுவனத்திடம்இருந்து, பிரதமர் நிவாரண நிதிக்கு பெறப்பட்ட நன்கொடையை, மத்திய அரசு திரும்ப கொடுக்க வேண்டும். 'பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இளைஞர்களுக்கு, 'ஸ்மார்ட் போன்' இலவசமாக கொடுப் போம்' என, வாக்குறுதி அளித்திருந்தோம்.


நடவடிக்கைதற்போது இந்த வாக்குறுதியை நிறைவேற்றுகிறோம். ஸ்மார்ட் போன் கொள்முதல் தொடர்பான பணி, நம் நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் ஒப்பந்தத்துக்கு விடப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்துக்கும், சீனாவைச் சேர்ந்த போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


குணத்தை மாற்ற முடியாது!மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பலமான அரசு இருப்பதை, காங்கிரஸ் தலைவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் தான் மத்திய அரசை விமர்சிக்கின்றனர். அவர்கள் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் ஆட்சியில் அதிகாரம் செலுத்தி வந்தனர். அவர்களது இயற்கையான குணத்தை மாற்ற முடியாது. முக்தார் அப்பாஸ் நக்விமத்திய சிறுபான்மை நலத் துறை அமைச்சர், பா.ஜ.,

Advertisement
வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஜூன்-202022:25:54 IST Report Abuse
Ganesan Madurai சரி குறைக்கலாம் நீ எவ்வளவு போடுவே? 55 வருசமா நீ கொள்ளை அடிச்ச எங்க பணத்தை மொதல்ல எடுத்து வை
Rate this:
Cancel
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
30-ஜூன்-202020:24:05 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன் /பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர மத்திய அரசு முயற்சித்து வருகிறது.// இதற்கு பெயர் தான் அரசியல்.... அதற்கும் மேலே என்று சொன்னால் காமெடி
Rate this:
Cancel
S.kausalya - Chennai,இந்தியா
30-ஜூன்-202020:04:44 IST Report Abuse
S.kausalya Rajaas, congress சரி இல்லை என்று மோடியை தேர்வு செய்தீர்களா? தமிழ் நாட்டில் தான் அவரை மண்ணை கவ்வ வைத்து விட்டோம் என்று பெருமையுடன் பறை சாற்றினமே, அப்புறம் என்ன, என்னவோ மோடியை நாம் ஓட்டு போட்டு தேர்வு சிறிது அனுப்பி வைத்த மாதிரியும் தற்போது அவரை குற்றம் சொல்ல நமக்கு மட்டுமே அருகதை உள்ளது போல் பேச வேண்டாம். அவரை கேலி செய்யுங்கள், விமர்சனம் செய்யுங்கள், ஆனால் தேர்ந்து எடுத்து அனுப்பினோம் என்று மட்டும் சொல்லாதீர்கள்.
Rate this:
Rajas - chennai,இந்தியா
30-ஜூன்-202022:10:02 IST Report Abuse
Rajasஅப்படியானால் பிஜேபி கூட்டணிக்கு தமிழ் நாட்டில் 2014 , 2016 , 2019 தேர்தல்களில் ஒரு ஒட்டு கூட கிடைக்கவில்லையா. 2019 பஞ்சாயத்து தேர்தலில் ஏழு மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளில் எப்படி வெற்றி பெற்றார்கள். 2014 இங்கே அவர்களுக்கு நல்ல ஆதரவு இருந்தது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X