பெட்ரோல் விலையை உயர்த்தி பணம் பறிப்பதா?| Dinamalar

'பெட்ரோல் விலையை உயர்த்தி பணம் பறிப்பதா?'

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூன் 29, 2020 | கருத்துகள் (57)
Share
'பெட்ரோல் விலை,உயர்த்தி பணம் பறிப்பதா?'

புதுடில்லி : ''பெட்ரோல் விலையை உயர்த்தி, மக்களிடமிருந்து மத்திய அரசு பணத்தை பறிக்கிறது. உடனடியாக, பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்,'' என, காங்கிரஸ் தலைவர் சோனியா கூறியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, காங்கிரஸ் சார்பில், நேற்று நாடு தழுவிய போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, காங்கிரஸ் தலைவர் சோனியா, 'வீடியோ' வாயிலாக கூறியுள்ளதாவது:ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதற்கு பின், 22 முறை, மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி உள்ளது. கொரோனா, ஊரடங்கு போன்ற நெருக்கடியான நேரத்தில், மக்களுக்கு உதவுவது தான் மத்திய அரசின் பணி. ஆனால், இந்த நெருக்கடியான நேரத்தில் கூட பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை உயர்த்தி, மக்களிடமிருந்து மத்திய அரசு பணத்தைப் பறிக்கிறது.


வாக்குறுதி



பெட்ரோல் விலை உயர்வு, மக்களின் அன்றாட வாழ்வை, பெரும் நெருக்கடியில் தள்ளியுள்ளது.உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலையை, மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து, தற்போது வரை, பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 9 ரூபாயும், டீசல் விலை, 11 ரூபாயும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த, 2014ல், மோடி தலைமையிலான அரசு பதவியேற்றதில் இருந்து, கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக, அரசு, 18 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.பஞ்சாப் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அமரீந்தர் சிங் கூறியதாவது:சீன நிறுவனத்திடம்இருந்து, பிரதமர் நிவாரண நிதிக்கு பெறப்பட்ட நன்கொடையை, மத்திய அரசு திரும்ப கொடுக்க வேண்டும். 'பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இளைஞர்களுக்கு, 'ஸ்மார்ட் போன்' இலவசமாக கொடுப் போம்' என, வாக்குறுதி அளித்திருந்தோம்.


நடவடிக்கை



தற்போது இந்த வாக்குறுதியை நிறைவேற்றுகிறோம். ஸ்மார்ட் போன் கொள்முதல் தொடர்பான பணி, நம் நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் ஒப்பந்தத்துக்கு விடப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்துக்கும், சீனாவைச் சேர்ந்த போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


குணத்தை மாற்ற முடியாது!



மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பலமான அரசு இருப்பதை, காங்கிரஸ் தலைவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் தான் மத்திய அரசை விமர்சிக்கின்றனர். அவர்கள் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் ஆட்சியில் அதிகாரம் செலுத்தி வந்தனர். அவர்களது இயற்கையான குணத்தை மாற்ற முடியாது. முக்தார் அப்பாஸ் நக்விமத்திய சிறுபான்மை நலத் துறை அமைச்சர், பா.ஜ.,

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X