கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு:போலீஸ் அதிகாரிகள் ஆஜராக உத்தரவு

Updated : ஜூன் 29, 2020 | Added : ஜூன் 29, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement

மதுரை:தூத்துக்குடி மாவட்ட கூடுதல் எஸ்.பி. குமார், டி.எஸ்.பி. பிரதாபன் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது உயர் நீதிமன்றம். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரிக்கச் சென்ற மாஜிஸ்திரேட்டிடம் ஆவணங்களைத் தர மறுத்ததோடு, காவலர் ஒருவர் இழிவாகப் பேசியதாக புகார்.. மூவரையும் நாளை செவ்வாய்கிழமை 30.6.20 மதுரை ஐகோர்ட்டில் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டுள்ளது.



latest tamil news



ஜெயராஜ் குடும்பத்தினரிடம் மாஜிஸ்திரேட்கள் விசாரணை


சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் இறப்பு தொடர்பாக குடும்பத்தினரிடம் மாஜிஸ்திரேட்கள் இருவர் விசாரணை மேற்கொண்டனர்.துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 19ம் தேதி விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட வியாபாரி ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் போலீசாரால் தாக்கப்பட்டனர்.


latest tamil news



கோவில்பட்டி சிறையில் அனுமதிக்கப்பட்டு இறந்தனர். சம்பவம் ஐகோர்ட் உத்தரவின் பேரில், மாஜிஸ்திரேட் பாரதிதாசன், துாத்துக்குடி தலைமை மாஜிஸ்திரேட் நீதிபதி ஹேமா ஆகியோர் விசாரித்தனர். திருச்செந்துார் விடுதியில் நடந்த விசாரணையில் ஜெயராஜின் மனைவி, மகள்கள், குடும்பத்தினர் பங்கேற்றனர்.சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில் நடந்துள்ள பல்வேறு வழக்குகள், விசாரணை பதிவேடுகளை பத்திரப்படுத்திட மதுரை ஐகோர்ட் உத்தரவின்பேரில்வருவாய்த்துறையினர் அதற்கான பணிகளை துவக்கியுள்ளனர்.


காங்.,ரூ 10 லட்சம் நிதி


தமிழ்நாடு காங்.,கமிட்டி தலைவர் அழகிரி நேற்று சாத்தான்குளம் வந்தார். ஜெயராஜ் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். கட்சி சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.அவர் கூறுகையில், இருவரையும் போலீசார் தாக்கியதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளதால் அவர்கள் கைது செய்யப்படவேண்டும் என்றார்.


புதிய வீடியோ வெளியீடு


ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கைது செய்த போலீசார், இருவரும் கடைமுன்பாக உருண்டு பிரண்டதால் உடலில் காயம் ஏற்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.
ஆனால் இன்று அவர்களது கடைக்கு பக்கத்து கடையில் இருந்த சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளில் ஜெயராஜை ஒரு போலீஸ்காரர் டூவீலரில் அழைத்துச்செல்கிறார்.சற்று நேரத்திற்கு பிறகு பென்னிக்ஸ் கிளம்பிச்செல்கிறார். எனவே போலீசார் அடித்த காயங்களை மறைப்பதற்காக இருவரும் தரையில் உருண்டு புரண்டார்கள் என பதிவு செய்தது முன்னுக்கு பின் முரணான தகவல் என தெரியவந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shekar Raghavan - muscat,ஓமன்
30-ஜூன்-202008:57:55 IST Report Abuse
Shekar Raghavan சீர்திருத்தம் ஒன்றே வழி
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
30-ஜூன்-202001:46:34 IST Report Abuse
தமிழ்வேல் இவனுவொலுக்கும் முட்டுக்குடுக்குறானுவோ பாருங்க.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
30-ஜூன்-202000:50:41 IST Report Abuse
தல புராணம் இருவரும் கடைமுன்பாக உருண்டு பிரண்டதால் உடலில் காயம் ஏற்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X