காஷ்மீரின் டோடா மாவட்டத்தில் கடைசி பயங்கரவாதி சுட்டுக் கொலை

Added : ஜூன் 29, 2020
Share
Advertisement
 காஷ்மீரின் டோடா மாவட்டத்தில் கடைசி பயங்கரவாதி சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்; ஜம்மு-காஷ்மீரின் டோடா மாவட்டத்தில், ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின், எஞ்சியிருந்த தளபதி மசூத், பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதையடுத்து, டோடா மாவட்டம், பயங்கரவாதிகள் இல்லாத பகுதியாக மாறியுள்ளது.பாதுகாப்பு படைபாலியல் பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வந்த மசூத், ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பில் சேர்ந்து, டோடா மாவட்டத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தார். நேற்று, அவர், அனந்த் நாக் மாவட்டம், குல் சோஹர் பகுதியில் பதுங்கியிருந்த போது, போலீசார், பாதுகாப்பு படையினர், ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் பிரிவினர் ஆகியோர் அடங்கிய படை, சுற்றி வளைத்தது.

இதையடுத்து, இரு தரப்பினரிடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், மசூத் மற்றும் லஷ்கர் - இ -தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இருவர், சுட்டுக் கொல்லப்பட்டனர்.இது குறித்து, ஜம்மு-காஷ்மீர் போலீஸ் துறை தலைவர், தில்பக் சிங் கூறும்போது, ''டோடா மாவட்டத்தின் கடைசி பயங்கரவாதி, மசூத் உயிரிழந்ததை அடுத்து, பயங்கரவாதிகள் இல்லாத பகுதியாக அது மாறியுள்ளது,'' என்றார். ஊடுருவல்கடந்த, 2019, ஆக., 5ல், ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும், 370வது சட்டப் பிரிவு நீக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அங்கு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, எல்லையில் பாக்., பயங்கரவாதிகளின் ஊடுருவல் தடுக்கப்பட்டது.அடுத்து, ஜம்மு - காஷ்மீரில் செயல்பட்டு வந்த பயங்கரவாதிகள் மீதான வேட்டை துவங்கியது. கடந்த ஓராண்டில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். நடப்பு மாதம், தெற்கு காஷ்மீரில், ஜெய்ஷ் - இ - முகமது, லஷ்கர் - இ - தொய்பா அமைப்புகளின் தளபதிகள் உட்பட, 40க்கும் அதிகமான பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X