அரசியல் செய்தி

தமிழ்நாடு

வீட்டிற்குள் அமர்ந்தபடி அறிக்கை: அமைச்சர் உதயகுமார்

Updated : ஜூன் 29, 2020 | Added : ஜூன் 29, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
 வீட்டிற்குள் அமர்ந்தபடி அறிக்கை: அமைச்சர் உதயகுமார்

சென்னை; ''கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்டுள்ளோரை, வீட்டிற்குள் அமர்ந்தபடி கொச்சைப்படுத்த நினைத்தால், அவர்கள் தோல்வி அடைவர்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலினை, வருவாய் துறை அமைச்சர், உதய குமார் மறைமுகமாக சாடினார்.

சென்னை, அயனாவரம் பகுதியில், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும், மாநகராட்சி ஊழியர்களுக்கு, கபசுர குடிநீர் மற்றும் ஊட்டச்சத்து மாத்திரைகளை, அமைச்சர் உதயகுமார் வழங்கினார்.அதன்பின், அவர் அளித்த பேட்டி:கொரோனாவுக்கு, மருந்து கண்டு பிடிக்கப்படாத நிலையிலும், உயிர் காக்கும் மருந்துகளை பயன்படுத்தி, மக்களை காக்கும் மகத்தான பணியில், முதல்வர் ஈடுபட்டுள்ார்.உலகில் பல்வேறு நாடுகளுக்கு முன் மாதிரியாக, நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

சென்னையில், 84 லட்சம் மக்கள் உள்ளனர்.தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று, காய்ச்சல் அறிகுறி உள்ளதா என, கண்காணித்து வருகின்றனர். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோருக்கு, அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோய் பரவலை குறைக்க, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மக்கள் அத்தி யாவசிய தேவையின்றி, வெளியில் வரக்கூடாது. மன உறுதியோடு, நம்பிக்கையோடு, இந்த சவாலில் வெற்றி பெறுவோம்.அரசு வழங்கும் அறிவுரைகளை பின்பற்றினால், நோய் தொற்றை கட்டுப்படுத்தலாம்.

கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்டு உள்ளோரை, வெளியில் வர அச்சப்பட்டு, வீட்டிற்குள் அமர்ந்து கொண்டு, கொச்சைப்படுத்த நினைத்தால், அவர்கள் தோல்வி அடைவர்; அவர்கள் கனவு பலிக்காது.தொற்று ஏற்பட்டதற்கு யார் பொறுப்பு என்பதை, விவாதம் செய்வதற்கான நேரம் இதுவல்ல; மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டிய நேரம்.இவ்வாறு, உதயகுமார் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Chennai,இந்தியா
30-ஜூன்-202022:26:07 IST Report Abuse
Balaji லண்டனிலோ இருக்காரா? டீடீல் யாருக்காவது தெரியுமா?
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
30-ஜூன்-202017:11:46 IST Report Abuse
Malick Raja இருவர் வெறும்வாய் துறை அமைச்சர் .. இன்றொரு பேச்சு நாளையொரு பேச்சு .
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
30-ஜூன்-202015:58:48 IST Report Abuse
Vijay D Ratnam ஹலோ மினிஸ்டர் சார், என்ன பேசுறீங்க. அவரு கம்முனு இருக்கணும்னு எப்படி எதிர்பார்க்குறீங்க. எதோ இந்தமட்டும் லஞ்சம், ஊழல், நிர்வாக சீர்கேடு, அதிகார துஷ்பிரயோகம் என்று பேசாமல் கொரோனா, குந்தாணி, ஒன்றிணைவோம் வா என்று ஏதாவது பெனாத்திட்டு போறாரு விடுங்க சார். அவரு பொழப்பு நடத்தவேணாமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X