பொது செய்தி

இந்தியா

மாநிலங்கள் வளர்ச்சி 14.3 சதவீதம் குறையும்: ஆய்வறிக்கை தகவல்

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூன் 29, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
மாநிலங்கள் வளர்ச்சி, 14.3 சதவீதம் குறையும்: ஆய்வறிக்கை

மும்பை :மாநிலங்களின், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 14.3 சதவீதம் அளவுக்கு குறையும் என்று, 'இந்தியா ரேட்டிங்ஸ்' ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்த ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கொரோனா பரவலை முன்னிட்டு, நாடு முடக்கப்பட்டதை அடுத்து, மாநிலங்களின் வளர்ச்சி, 14.3 சதவீதம் வரை சரிவைக் காணும். குறிப்பாக, அசாம், கோவா, குஜராத், சிக்கிம் ஆகிய மாநிலங்களின், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம், இரட்டை இலக்கம் அளவுக்கு சரிவைக் காணும். இந்த வளர்ச்சி விகித சரிவு, 1.4 சதவீதத்தில் துவங்கி, 14.3 சதவீதம் வரை, மாநிலங்களைப் பொறுத்து இருக்கும்.

நாடு முடக்கத்தால், மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் மாநிலங்கள் பட்டியலில், கர்நாடகா, ஜார்க்கண்ட், தமிழ்நாடு, கேரளா, ஒடிசா ஆகியவை முன்னிலை வகிக்கின்றன.மத்தியபிரதேசம், பஞ்சாப், ஆந்திரபிரதேசம், உத்தரபிரதேசம், பீஹார் ஆகிய ஐந்து மாநிலங்கள், குறைவான பாதிப்பை கண்டுள்ளன.மேலும் நாடு முடக்கத்தால், ஒவ்வொரு துறையும், ஒவ்வொரு அளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. விவசாயம், தொழில், சேவைகள் ஆகிய துறைகளில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் வெவ்வேறாக இருக்கின்றன.
உதாரணமாக, நாடு முடக்கத்தால் விவசாய நடவடிக்கைகள் குறைவான பாதிப்பையே அடைந்துள்ளன. எனவே, விவசாயம் அதிகமிருக்கும் மாநிலத்தைவிட, விவசாயம் குறைவாக இருக்கும் மாநிலம், அதிக பாதிப்பை சந்தித்திருக்கும்.

இதேபோல், வங்கி மற்றும் நிதி சேவைகள், தகவல் தொழில்நுட்ப சேவைகள் போன்றவை குறைவான தாக்கத்தையே சந்தித்தன. இவற்றுக்கான செயல்பாடுகளில், டிஜிட்டல் வசதிகள் இருந்ததால், வீடுகளில் இருந்தே வேலைகளை தொடர முடிந்தது.
நாடு முடக்கப்படுவது, அனைத்து மாநிலங்களின் வருவாய் செயல்திறனை மோசமாக பாதிக்கும் என்றாலும், ஒரு மாநிலத்தின் மொத்த வருவாயில், சொந்த வரி வருவாய் பங்கு அதிகமிருக்கும் மாநிலங்கள், அதிக பாதிப்பை அடையும். அந்த வகையில், தமிழ்நாடு, மஹாராஷ்டிரா, குஜராத், கேரளா, தெலுங்கானா, ஹரியானா ஆகிய மாநிலங்கள் அதிக பாதிப்பை சந்திக்கும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஜூன்-202007:20:58 IST Report Abuse
தமிழ் இப்பொமட்டும் என்ன வாழுதாம். இதுக்குமுன்னாடிமட்டும் என்ன வாழுச்சாம்.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
30-ஜூன்-202004:08:21 IST Report Abuse
blocked user ஊரிலுள்ள பாதிக்கு மேல் நிறுவனங்கள் இயங்கவில்லை... பிறகு எப்படி உற்பத்தி குறையாமல் இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X