அரசியல் செய்தி

தமிழ்நாடு

நீதி கேட்கும் வாசகத்துடன் முக கவசம் அணிந்த கனிமொழி

Added : ஜூன் 29, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
 நீதி கேட்கும் வாசகத்துடன் முக கவசம் அணிந்த கனிமொழி

சென்னை; சாத்தான்குளம் வியாபாரிகள் இருவரின் மரணத்திற்கு நீதி கேட்கும் வகையில், 'ஜஸ்டிஸ் பார் ஜெயராஜ் அண்டு பென்னிக்ஸ்' என்ற, ஆங்கில வாசகம் இடம் பெற்ற முக கவசத்தை, கனிமொழி அணிந்து வருகிறார்.

துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான, ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர், போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டு, பின், கோவில்பட்டி கிளைச் சிறையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, இருவரும் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக, 'டுவிட்டர்' தளத்தில், 'ஜஸ்டிஸ் பார் ஜெயராஜ் அண்டு பென்னிக்ஸ்' என்ற, 'ஹேஸ்டேக்' உருவாக்கப்பட்டு உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி சினிமா நடிகர் - நடிகையர் மற்றும் கிரிக்கெட் வீரர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், தொழில்அதிபர்கள், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள், தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.இந்நிலையில், தி.மு.க., - எம்.பி., கனிமொழி, நேற்று, 'டுவிட்டர்' பக்கத்தில், கறுப்பு, சிவப்பு நிறத்தில் முக கவசம் அணிந்த போட்டோவை பதிவிட்டு உள்ளார்.அதில், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும், 'ஜஸ்டிஸ் பார் ஜெயராஜ் அண்டு பென்னிக்ஸ்' என்ற ஆங்கில வாசகம் அச்சிடப்பட்டுள்ளது.அவரை தொடர்ந்து, தென் மாவட்டங்களை சேர்ந்த, தி.மு.க., நிர்வாகிகள், கனிமொழி ஆதரவாளர்கள், அந்த முக கவசங்களை அணிந்து வருகின்றனர்.

மீண்டும் புகார் மனு:கடந்த, 26ம் தேதி, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில், கனிமொழி அளித்த புகார் மனுவில், 'தந்தை மகன் உயிரிழப்புக்கு காரணமான, போலீஸ் அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்தியிருந்தார்.இந்நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு, கனிமொழி நேற்று மீண்டும் ஒரு மனு அனுப்பியுள்ளார்.அதில், 'மனித உரிமை மீறலில் ஈடுபட்ட, போலீஸ் துறையினர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்தியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நிலா - மதுரை,இந்தியா
30-ஜூன்-202022:16:33 IST Report Abuse
நிலா தங்கள் அண்ணனையே மிஞ்சி விட்டாய் அம்மா குடும்பமே கோளறு பிடித்தவர்களே?
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
30-ஜூன்-202021:26:33 IST Report Abuse
ocean kadappa india தமிழகத்தில் பஞ்சமி நிலங்கள் பொறம் போக்கு பகுதிகளிலெல்லாம் பதாகைகள் சிரித்தபடி பேனர்கள் இரு வண்ண கொடிகள் தோரணங்கள் உதய சூரிய பஸ் ஸ்டாப்பிங்குகள் என விளம்பரங்கள் இடம்பிடித்து விட்டன. இப்போ முகத்திலும் பேனர் விளம்பரமா. தாயே.
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
30-ஜூன்-202021:18:13 IST Report Abuse
ocean kadappa india எலக்ஷன் நெருங்குதில்ல. என்னென்னமோ தில்லாலங்கிடி வேலையெல்லாம் காட்றாங்க..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X