அரசியல் செய்தி

தமிழ்நாடு

அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பு உள்ளது: காமராஜ்

Added : ஜூன் 29, 2020
Share
Advertisement
 அத்தியாவசிய பொருட்கள்  கையிருப்பு உள்ளது: காமராஜ்

சென்னை; ''தமிழக அரசிடம், அத்தியாவசிய பொருட்கள், தேவையான அளவிற்கு கையிருப்பில் உள்ளன,'' என, உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.

சென்னை, கோடம்பாக்கம் மண்டலம், தி.நகர், ரங்கநாதன் தெருவில் நடக்கும் கொரோனா தடுப்பு பணிகள்; துக்காரம் தெருவில் நடந்த, மருத்துவ முகாம் ஆகியவற்றை, உணவுத் துறை அமைச்சர் காமராஜ், நேற்று ஆய்வு செய்தார்.பின், கோடம்பாக்கம் மண்டல அதிகாரிகளுடன், தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

மேலும், மண்டலத்தில் செயல்பட்டு வரும், கொரோனா தொலைபேசி ஆலோசனை மைய பணிகளையும் பார்வைஇட்டார்.இதன்பின், அமைச்சர் காமராஜ் அளித்த பேட்டி:இம்மாதம், 8ம் தேதி முதல் கொரோனா தடுப்பு பணியில், அமைச்சர்கள் ஈடுபட்டுஉள்ளனர்.அப்போது, சென்னையில், 50 சதவீதமாக இருந்த குணமடைந்தோர் எண்ணிக்கை, தற்போது, 60 சதவீதமாக அதிகரித்துஉள்ளது.தற்போது, 38 சதவீத நபர்கள் தான் சிகிச்சையில் உள்ளனர்.

இனி வரும் காலத்தில், தொற்று எண்ணிக்கை வெகுவாக குறையும் என, நம்புகிறோம்.தமிழகத்தில், அத்தியாவசிய பொருட்கள், தேவையான அளவுக்கு கையிருப்பில் உள்ளன. சென்னையில், 90 சதவீதம் பேருக்கு, கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டு விட்டது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X