2 ம் கட்ட ஊரடங்கு: வழிகாட்டும் நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு| MHA issues new guidelines for Unlock 2 | Dinamalar

பொது செய்தி

இந்தியா

2 ம் கட்ட ஊரடங்கு: வழிகாட்டும் நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

Updated : ஜூன் 29, 2020 | Added : ஜூன் 29, 2020 | கருத்துகள் (1)
Share
Social/ political/ sports/ entertainment/ academic/ cultural/ religious functions & other large congregations remain prohibited, Unlock 2, MHA, new guidelines, Central Government, Unlock 2.0 Guidelines,  Schools, Colleges, Cinemas, Religious Shrines, Ministry of Home Affairs, Curfew

புதுடில்லி: தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளை ஜூலை 31 வரை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள்,விளையாட்டு பயிற்சி நிறுவனங்கள், கலாச்சார மற்றும் மத ரீதியான அமைப்புகள் திறக்க ஜூலை 31-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, தமிழகத்தில், மார்ச், 24ம் தேதியிலிருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் நோயை கட்டுப்படுத்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், மக்களின் வாழ்வாதாரம் கருதி, அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. அதன்பின் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நோய் பரவல் அதிகரித்தது. இதனால் பள்ளி,கல்லூரிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.


latest tamil news








Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X