பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கிலும் செயல்பட அனுமதி சிறு, குறு நிறுவனங்கள் வலியுறுத்தல்

Added : ஜூன் 29, 2020
Share
Advertisement

சென்னை; 'ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும்' என, தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, தமிழக முதல்வருக்கு, அந்த சங்கம் அனுப்பியுள்ள கடிதம்:ஊரடங்கு காலத்தில், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை உற்பத்தி கேந்திரமாக மட்டுமல்லாமல், பொருள் வினியோகம் மற்றும் வழங்கலிலும் முக்கிய இடம் வகிக்கின்றது.

பெரு நிறுவனங்களிடம் இருந்து, சென்னை நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட ஆர்டர்களுக்கான பொருட்களை, உடனடியாக சப்ளை செய்யவில்லை எனில், அனைத்து ஆர்டர்களும் ரத்தாகும்.தமிழக அரசு நிறுவனங்களே, கொடுக்கப்பட்ட ஒப்பந்தங்களுக்கான அவகாசத்தை நீட்டிக்க மறுக்கின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, குறைந்தது ஆறு மாதங்களுக்கு கால நீட்டிப்பு செய்து தர, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழில்துறையில் வேலை பார்க்கும், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்தத் தொழில்களை நம்பி உள்ள, அமைப்பு சாரா தொழிலாளர்கள், குறிப்பாக சுமை துாக்கும் தொழிலாளர்கள், சுமை வண்டி ஓட்டுவோர், கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, ஜூலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், தொழிற்சாலைகளுக்கு, குறிப்பாக, சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். அவை செயல்பட, அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X