பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடக்கும்: ஐ.சி.எம்.ஆர்., எச்சரிக்கை

Updated : ஜூன் 29, 2020 | Added : ஜூன் 29, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

கோவை: 'கோவையில் ஜூலை 3வது வாரத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடக்கும்' என, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்.,) தெரிவித்துள்ளது.



latest tamil news



கோவையில் கடந்த மார்ச், 19ம் தேதி, முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மே 3ம் தேதி வரை, 146 பேருக்கு பாதிப்புக்குள்ளாகினர்; ஒருவர் உயிரிழந்த நிலையில், 145 பேர் குணமடைந்தனர். உள்நாட்டு விமானப் போக்குவரத்து அனுமதி வழங்கிய பின், கோவையில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் துவங்கியது. இன்றைய நிலவரப்படி, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 528 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஜூலை 3வது வாரத்தில் கோவையில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை, ஆயிரத்தைக் கடக்கும் என, ஐ.சி.எம்.ஆர்., கணித்துள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள, சுகாதார துறைக்கு உத்தரவிட்டுள்ளது.


latest tamil news




இதுகுறித்து மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் ரமேஷ்குமார் கூறுகையில், 'கோவையில் பொதுப் போக்குவரத்து துவங்கிய பின்னரே கொரோனா பாதிப்பு அதிகரித்தது. ஜூலை 3வது வாரத்தில் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை, ஆயிரத்தைக் கடக்கும் என, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. தற்போது, 4,000 படுக்கை வசதிகள் உள்ளன. கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன' என்றார்.


விசாரணை கைதிகளுக்கு கொரோனா


சென்னை புழல் மத்திய சிறையில் இருந்த விசாரணை கைதிகள், 23 பேர் சென்னையிலிருந்து கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், 42, 38 வயதுடைய இருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இவர்கள் தவிர, ஒண்டிப்புதூர், சின்னியம்பாளையம், நீலாம்பூர், ஆர்.எஸ்.புரம் பி.என்.பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 24 பேருக்கு இன்று தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 528ஆக உயர்ந்துள்ளது. 187 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்; 339 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sri Ra - Chennnai,இந்தியா
30-ஜூன்-202010:44:14 IST Report Abuse
Sri Ra அவ்வளவு தான
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
30-ஜூன்-202009:40:11 IST Report Abuse
Girija என் தம்பி புத்திசாலி வானிலை நிலையத்தில் வேலை கிடைக்கல அதான் இங்க சேர்ந்திருக்கான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X