பொது செய்தி

தமிழ்நாடு

சாத்தான்குளம் வழக்கு சிபிஐக்கு மாற்றம்; அரசாணை வெளியீடு

Updated : ஜூன் 29, 2020 | Added : ஜூன் 29, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement

சென்னை: சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் குறித்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.



latest tamil news



தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கு காலத்தில், குறிப்பிட்ட நேரத்தை தாண்டி கடையை திறந்து வைத்ததாக கூறி போலீசார் கைது செய்தனர். பின்னர், கடுமையாக தாக்கப்பட்டு கோவில்பட்டி கிளைச்சிறைக்கு கொண்டு செல்லபட்டனர். பின்னர் இருவரும் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தனர். இது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.


latest tamil news



இந்த விவகாரம் தொடர்பாக 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இன்ஸ்பெக்டராக இருந்த ஸ்ரீதர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். தந்தை, மகன் மரணத்திற்கு பல தலைவர்கள், பிரபலங்கள் கண்டனம் தெரிவித்தனர். முதல்வர் பழனிசாமி, சாத்தான்குளம் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என நேற்று அறிவித்திருந்தார். இந்நிலையில், இவ்வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
30-ஜூன்-202013:35:13 IST Report Abuse
Malick Raja CBI.. இடம் கொடுத்தாசுள்ள .. எல்லோரும் போங்க 2050.வரை விசாரணை அப்புறம் கல்லைத்தூக்கி போட்டு கட்டையில் போக வைப்பர் .. நல்ல சிபிஐ .. இதற்க்கு முன் உள்ளது எத்தனை பாக்கி .. அடேங்கப்பா போச்சு .. போச்சு .. இனி பேசவேண்டியதே இல்லை ..
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
30-ஜூன்-202012:51:21 IST Report Abuse
தமிழ்வேள் //சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த பேய்குளம் இந்த ஊரை தான் கனிமொழி தத்து எடுத்து இருக்கிறார்...இங்கு நடக்கும் பல தில்லுமுல்லுகளை பஞ்சாயத்து உறுப்பினர் ஜெயகுமார் எதிர்த்து பல முறை கேள்வி கேட்டுள்ளார்.தகவல் உரிமை சட்டம் மூலம் பல தகவல் சேகரித்தார்.பேய்குளம் வியாபாரி சங்க தலைவர் ஸ்டாலின் .இன்னொருவர் மிக்கேல் பிரபல ரவுடி இவர்கள் மூலம் ஜெயகுமார் கொலை செய்ய பட்டார்.இதில் தனிப்படை அமைத்ததில் ரகுகணேஷ் பாலகிருஷ்ணன் அடங்குவர்.பாலகிருஷ்ணன் தேவேந்திரகுல வேளாளர்.ரகு கணேஷ் யாதவ சமுதாயம். ஆய்வாளர் ஸ்ரீதர் நாடார் சமுகம். இதுவரைக்கும் போராட்டக்காரர்கள் ஸ்ரீதர் பற்றி அவருடைய பெயரைகூட உச்சரிக்கவில்லை. ஜெயகுமார் கொலை செய்ய பட்டு நாற்பது நாளில் இவ்வளவு பிரச்னை/// இப்படி ஒரு செய்தி சாத்தான்குளத்தைப்பற்றி உலவுகிறது ...இது உண்மையாக இருந்தால் ,கோவையில் இஸ்லாமிய தீவிரவாதத்தை வளர்த்துவிட்டதை போல தூத்துக்குடியில் கிறிஸ்தவ தீவிரவாதம் மதமாற்றத்தை தூண்டி குளிர்காய திமுக துணை போகிறது என்ற ஐயம் பலப்படும் .....இது தமிழகத்தின் அமைதிக்கு நல்லதல்ல ....மத்திய அரசின் தலையீடு உடனடி தேவை ....
Rate this:
Cancel
bheeshma - Kanyakumari,இந்தியா
30-ஜூன்-202012:35:39 IST Report Abuse
bheeshma நிச்சயம் ஏதாவது ஒரு பெரிய காரணம் இருக்கும். மொபைல் கடை, சர்வீஸ், ஆபாச படம், இதுவும் கவனிக்கபட வேண்டும். போலீசாரின் அல்லது போலீஸ் அதிகாரிகளின் குடும்ப வீடியோ, அல்லது போட்டோ சர்வீஸ் செய்யும் போது ரெக்கவர் செய்யப்பட்டு தவறாக உபயோகிக்கப்பட்டதா, மிரட்டப்பட்டார்களா பெண்கள். என்ற கோணத்திலும் விசாரிக்க வேண்டும். ஆனாலும் கொலை செய்ய போலிசுக்கு அதிகாரமில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X