சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலை படுமோசம்: பொது மக்கள் அவதி

Added : ஜூன் 29, 2020
Share
Advertisement

கச்சிராயபாளையம் : வெள்ளிமலை - கொட்டபுத்துார் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

கல்வராயன்மலையில் கொட்டபுத்துார், தொரடிபட்டு, பன்னிபாடி உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்குச் செல்ல வெள்ளிமலை - கொட்டபுத்துார் சாலையே பிரதானமாக உள்ளது. இப்பகுதி மக்கள் அதிகளவில் இரு சக்கர வாகனங்களையே பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சாலையில் தினமும் நுாற்றுக்கணக்கான இரு சக்கர வாகனங்கள் மற்றும் லோடு வாகனங்களும் வந்து செல்கின்றன. ஆனால், சாலையில் பல இடங்களில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாகி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் கீழே விழுந்து படுகாயமடைகின்றனர். மேலும், இந்த வழியாக விவசாயிகள் விளை பொருட்களைக் கொண்டு செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். சாலையை சீரமைக்க கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, மோசமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X