சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எஸ்.ஐ.,யை எட்டி உதைத்த மாஜி எம்.பி.,

Added : ஜூன் 29, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
 எஸ்.ஐ.,யை எட்டி உதைத்த மாஜி எம்.பி.,

சேலம்; எஸ்.எஸ்.ஐ.,யுடன் தகராறில் ஈடுபட்டு, எட்டி உதைத்த, 'மாஜி' எம்.பி., மீது, மூன்று பிரிவுகளில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம், நல்லகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் அர்ஜுனன், 77. தர்மபுரி தொகுதி, தி.மு.க., முன்னாள், எம்.பி.,யான இவர், அ.தி.மு.க., - தே.மு.தி.க., தீபா பேரவை என பல்வேறு கட்சிகள் தாவி, தற்போது, அ.தி.மு.க.,வில் உள்ளார்.நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு, அர்ஜுனன் காரில், ஓமலுாரில் இருந்து சேலம் கிளம்பினார். ஓமலுார் சுங்கச்சாவடி அருகே, எஸ்.எஸ்.ஐ., ரமேஷ், பட்டாலியன் போலீஸ் தேசிங் ஆகியோர், வாகன தணிக்கையில் ஈடுபட்டுஇருந்தனர்.

அர்ஜுனன் காரை நிறுத்திய போலீஸ்காரர் தேசிங், 'இ - பாஸ்' கேட்டுள்ளார். அதற்கு அவர், 'நான் யார் தெரியுமா? முன்னாள் எம்.பி.,' என தெரிவித்துள்ளார். 'அப்படியெனில், அடையாள அட்டையை காட்டுங்கள்' என தேசிங் கேட்க, டென்ஷன் ஆன அர்ஜுனன், 'யாரிடம் அடையாள அட்டை கேட்கிறீர்கள்' எனக் கூறி, போலீசாரை, ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்தார்.

இதையடுத்து, அங்கு வந்த மற்ற போலீசாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில், எஸ்.எஸ்.ஐ., ரமேஷை எட்டி உதைத்து, கீழே தள்ளினார். சக போலீசார், அங்கு பணியில் இருந்த சுகாதாரத்துறை, சுங்கச்சாவடி ஊழியர்கள், அவரை சமாதானம் செய்தனர்.பின், அர்ஜுனன் கிளம்பி சென்றார்.

இந்த சம்பவங்களின், 'வீடியோ' காட்சிகள், 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்'கில் பரவின.எஸ்.எஸ்.ஐ., ரமேஷ் புகார்படி, அர்ஜுனன் மீது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், ஆபாச வார்த்தைகளால் திட்டுதல், தாக்குதலில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளில், கருப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
02-ஜூலை-202008:27:48 IST Report Abuse
skv srinivasankrishnaveni பூர்வ ஜென்ம வாசனை அதான் எட்டி உதைச்சாங்க என்ன செய்ரது முடிஞ்சால்ப்பிடிச்சு உள்ளேபோடுங்க இவனெல்லாம் ஜஸ்ட் ஐந்தாண்டு vip க்களேதான் பதவிபோனால் நானும் அவனும் சமே தான் வேலையே செய்யாமல் சம்பளம் வாங்கினாங்க ஒரு எம்பியா இப்போதும் வேலையே இல்லாமல் பென்சன் வங்கின்னு ஜாலியா உதைக்குறானுக
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
30-ஜூன்-202017:19:21 IST Report Abuse
Malick Raja தொலைக்காட்சியில் பார்த்தபோது உதவிஆய்வாளர் இவரை அடித்து தள்ளியதும் அதன் பின்னரே இந்த முன்னாள் MP.உதைக்க காலை ஓங்கினார் .. உதைக்க வாய்ப்பேயில்லை ..காவல்துறை செய்வது தவறு ..முதலில் காவலில் நிற்பவர்கள் திருந்தவேண்டும் அல்லது மக்களால் திருத்தப்படும் நிலைவருமானால் அது கவலைக்குரியதாகிவிடும்
Rate this:
Baskar - Madurai,இந்தியா
30-ஜூன்-202021:06:06 IST Report Abuse
BaskarNonsense. EX MP behavior is awful. Police should have given the proper treatment to this stupid EX MP....
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
30-ஜூன்-202013:01:50 IST Report Abuse
Rafi இப்போது ஆளும் கட்சி என்ற மமதையில் வரம்பு மீறி செயல் பட்ட காட்சியை நானும் வலை தளத்தில் கண்டேன். காவலர்கள் கோபம் வந்த போதும் அடக்கி வாசித்ததையும் அறிய முடிகின்றது. சாமானிய மக்கள் சிறிய தவறு செய்தால் வரம்பு மீறி செயல் படும் காவல்துறையா இது என்று மனதில் வந்து சிரித்து கொண்டேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X