பொது செய்தி

தமிழ்நாடு

பஸ்களில் கிருமி நாசினி தெளிக்க, 'ரோபோ'

Added : ஜூன் 29, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 பஸ்களில் கிருமி நாசினி  தெளிக்க, 'ரோபோ'

தஞ்சாவூர்; பஸ்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும், 'ரோபோ'வை, தனியார் கல்லுாரி மாணவர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.

தஞ்சாவூர், கும்பகோணம் அடுத்த கள்ளப்புலியூரில், 'அரசு இன்ஜினியரிங் கல்லுாரி' செயல்படுகிறது.தனியார் கல்லுாரியான இங்கு, இயந்திரவியல் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சஞ்சய்பாலாஜி, ஜோஸ்வா ஆராக் ஆஸ்டின், என்.எஸ்.எஸ்., முன்னாள் மாணவர் முத்துகிருஷ்ணன் ஆகியோர், துறைத் தலைவர் சதீஷ்குமார் வழிகாட்டுதலில், நவீன ரோபோவை வடிவமைத்துள்ளனர்.

இந்த ரோபோ, பஸ்களின் இருக்கைகளில் உள்ள துாசு, குப்பைகளை சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளிக்க, தானாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ரோபோ இயந்திரத்தில், 2 லிட்டர் சானிடைசர் நிரப்பினால், 10 நிமிடங்களில், குறைந்தது மூன்று பஸ்களை சுத்தம் செய்யும். இதை, 'ஆண்ட்ராய்டு' மொபைல் போன் மூலம் இயக்க முடியும். ரோபோவின் செயல் விளக்கம், நேற்று கல்லுாரி வளாகத்தில், வேளாண் துறை அமைச்சர் துரைகண்ணு முன்னிலையில் நடந்தது.ரோபோவை உருவாக்கிய மாணவர்களையும், வழிகாட்டிய ஆசிரியரையும் அமைச்சர் பாராட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskaran R V - CHENNAI,இந்தியா
30-ஜூன்-202012:43:38 IST Report Abuse
Baskaran R V பாராட்டுக்களோடு நின்று விட கூடிய விஷயம் அல்ல இது. சம்பந்தப்பட்ட அரசு துறை, இது போன்ற மாணவர்களின் கண்டு பிடிப்புகளை ஊக்குவித்து, குறைந்த பட்சம், மாநில அளவில் இருக்கும் எல்ல அரசு துறைகளில், இது போன்ற தானியங்கி "ரோபோ"க்களை உபயோகப் படுத்துவதற்கு ஆவண செய்ய வேண்டும். சுதந்திர தினம் மற்றும், குடியரசு தினங்களில், இது போன்ற பல அறிய கண்டுபிடிப்புகளை செய்த மாணவர் குழுக்களை உலகிற்கு அறிமுகப் படுத்தப் பட வேண்டும். பல விருதுகள் அளித்து, கவுரவிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X