சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆனைமலை அருகே தூக்குப்போட்டு இருவர் தற்கொலை

Added : ஜூன் 29, 2020
Share
Advertisement

ஆனைமலை:கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகே, ஒரே சேலையில் தூக்குப்போட்டு இருவர் தற்கொலை செய்து கொண்டனர்.
கேரள மாநிலம் ஒட்டப்பாலம் பகுதியைச் சேர்ந்தவர் வீரன்குட்டி, 46, இவர், ஆத்துப்பொள்ளாச்சி, மீனாட்சிபுரம் பகுதிகளில் சீமாறு தயாரிக்கும் பணி செய்து வந்தார். அப்போது, அங்கு ஆத்துப்பொள்ளாச்சியை சேர்ந்த மாசிலாமணி மனைவி அய்யம்மாள், 44, பணியாற்றி வந்தார். இருவருக்குள்ளும் பழக்கம் ஏற்பட்டதால், இணைந்து வாழ முடிவெடுத்தனர். கடந்த, ஆறு மாதத்துக்கு முன்பு ஐயம்மாள் தனது கணவரிடம் இருந்து பிரிந்து, ஆனைமலை அண்ணாநகரில் வாடகை வீட்டில் வீரன்குட்டியுடன் வசித்து வந்தார்.
இவர்களை உறவினர்கள் கண்டித்ததால் இருவரும் கடும் மன விரக்தியில் இருந்தனர். மேலும், கடந்த சில நாட்களாக வருமானமின்றி கடன் தொல்லை அதிகரித்ததால் இன்று இரவு, ஒரே சேலையை இரண்டாக பிரித்து, அதில் வீட்டின் விட்டத்தில் இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். சடலங்களை மீட்டு ஆனைமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X