பொது செய்தி

தமிழ்நாடு

சிகிச்சைக்கு தவித்த பெண்: உதவிய அரியலுார் கலெக்டர்

Updated : ஜூன் 30, 2020 | Added : ஜூன் 29, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

பெரம்பலுார்; 'டயாலிசிஸ்' சிகிச்சைக்கு செல்ல, 'இ - பாஸ்' கிடைக்காத பெண்ணை, தனி ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்த, அரியலுார் கலெக்டருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

அரியலுார் மாவட்டம், வாழைக்குறிச்சியைச் சேர்ந்தவர் ராமதாஸ்; மனைவி ராஜகுமாரி, 47. கூலித் தொழிலாளியான இவருக்கு, இரு சிறுநீரகங்களும் பழுதடைந்தன. தஞ்சாவூரில் உள்ள, கே.ஜி., தனியார் மருத்துவமனையில், 'டயாலிசிஸ்' சிகிச்சை பெறுகிறார். கடந்த, 26ம் தேதி, டயாலிசிஸ் சிகிச்சைக்காக ராஜகுமாரி சென்றபோது, இ - பாஸ் இல்லாமல், கும்பகோணத்தில் போலீசார் தடுக்கவே, ஊர் திரும்பினார். பலமுறை விண்ணப்பித்தும், இ - பாஸ் கிடைக்கவில்லை. டயாலிசிஸ் செய்யாமல், மூச்சுத் திணறலால், ராஜகுமாரி கடுமையாக அவதிப்பட்டு வந்தார்.

இந்த தகவல், அரியலுார் கலெக்டர் ரத்னாவுக்கு தெரிந்தது.அவர், உடனடியாக தனி ஆம்புலன்ஸ் அனுப்பி, ராஜகுமாரியை நேற்று காலை, தஞ்சாவூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, டயாலிசிஸ் செய்து, மீண்டும் வீட்டில் விட ஏற்பாடு செய்தார்.கலெக்டரின் மனிதாபிமான செயலை, பலரும் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TechT - Bangalore,இந்தியா
30-ஜூன்-202017:17:58 IST Report Abuse
TechT why epass not issued for critical patients.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X