சேமிப்பு பணம் ரூ.80 ஆயிரத்தில் உணவு: சிறுவர்களுக்கு பாராட்டு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சேமிப்பு பணம் ரூ.80 ஆயிரத்தில் உணவு: சிறுவர்களுக்கு பாராட்டு

Updated : ஜூன் 30, 2020 | Added : ஜூன் 29, 2020
Share

புவனகிரி; உண்டியல் சேமிப்பு, 80 ஆயிரம் ரூபாயில், நரிக்குறவர்களின் பிள்ளைகளுக்கு, 40 நாட்கள் தொடர்ந்து உணவு வழங்கிய சிறுவர்களை, கீரப்பாளையம் சேர்மன் பாராட்டி, பரிசு வழங்கினார்.

கடலுார் மாவட்டம், ஒரத்துார் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி, தமிழ்ச்செல்வம் - ஷகிலா; அரசுப் பள்ளி ஆசிரியர்கள். இவர்களது மகன் நரேந்திரன், 12; மகள் நிரஞ்சனா, 8. இவர்கள், தாங்கள் உண்டியலில் சேமித்த பணத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ எண்ணினர். கீரப்பாளையம் ஒன்றியம், ஜெ.ஜெ.நகரில், நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்கள் வறுமையில் வாடுவது தெரிந்தது.அதேபோல், காந்தி நகரில், ஒரே குடும்பத்தில், பெற்றோரை இழந்த ஒன்பது குழந்தைகள், போதிய உணவு இல்லாமல் அவதிப்பட்டது தெரிந்தது.

இதையடுத்து, அவர்களுக்கு, சேமிப்பு பணம், 80 ஆயிரம் ரூபாய் செலவில், தொடர்ந்து, 40 நாட்களுக்கு உணவு வழங்கினர். இதையறிந்த, பா.ம.க.,வைச் சேர்ந்த ஒன்றிய சேர்மன் கனிமொழி, சிறுவர்களை பாராட்டி, பரிசு வழங்கினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X