பொது செய்தி

இந்தியா

59 சீன செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூன் 29, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி : 'டிக் டாக், ஷேர் இட், யூ.சி., பிரவுசர்' உள்ளிட்ட, 59 சீன செயலிகளுக்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளது.காஷ்மீர் மாநிலம், லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், கடந்த, 15ம் தேதி, சீன ராணுவம் நடத்திய தாக்குதலில், இந்திய வீரர்கள், 20 பேர் வீரமரணமடைந்தனர். இந்த மோதலைத் தொடர்ந்து இருநாட்டு எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.இதற்கிடையே, இந்தியாவின்
TikTok, SHARE it,bans, Govt, Chinese apps,  59, china, india, UC Browser, Shein, Helo, Likee, WeChat, govt of india, central government, Ministry of Information Technology, Information Technology Rules 2009, Procedure and Safeguards for Blocking of Access of Information by Public,  Indian Cyber Crime Coordination Centre, Ministry of Home Affairs, border issue, india-china stand off

புதுடில்லி : 'டிக் டாக், ஷேர் இட், யூ.சி., பிரவுசர்' உள்ளிட்ட, 59 சீன செயலிகளுக்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளது.

காஷ்மீர் மாநிலம், லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், கடந்த, 15ம் தேதி, சீன ராணுவம் நடத்திய தாக்குதலில், இந்திய வீரர்கள், 20 பேர் வீரமரணமடைந்தனர். இந்த மோதலைத் தொடர்ந்து இருநாட்டு எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதற்கிடையே, இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் உள்ள சீன செயலிகளுக்கு தடை விதிக்கக்கோரி மத்திய அரசிடம், உளவு அமைப்புகள் பரிந்துரைத்தன. இது தொடர்பாக, பலகட்ட ஆலோசனைகள் நடந்தன. இந்நிலையில், 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு நேற்று இரவு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி, 'டிக் டாக், ஷேர் இட், யூ.சி., பிரவுசர், கிளாஷ் ஆப் கிங்ஸ், டி.யூ., பேட்டரி சேவர், ஹெலோ, யூகேம் மேக்கப், எம்.ஐ., கம்யூனிட்டி, சி.எம்., பிரவுசர், வைரஸ் கிளீனர், பியூட்டி பிளஸ், வீ சாட், எக்ஸெண்டர், செல்பி சிட்டி, வீ சின்க், விவா வீடியோ, டி.யூ., ரெக்கார்டர், கேம் ஸ்கேன்னர், கிளீன் மாஸ்டர்' உள்ளிட்ட, 59 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


latest tamil newsஇது தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம், நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவின், 130 கோடி மக்களின் தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பு குறித்து, சமீப காலமாக கவலைகள் தெரிவிக்கப்பட்டன. சில, 'மொபைல் போன்' செயலிகள் தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அதன் மூலம் தரவுகள் திருடப்படுவதாகவும், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சத்திற்கு, பல புகார்கள் வந்தன.

இந்தியாவுக்கு வெளியே உள்ள, 'சர்வர்'கள் மூலம், இந்த சட்டவிரோத முயற்சிகள் நடந்து வந்தது தெரிய வந்தது. இது, நாட்டின் பாதுகாப்பிற்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளதால், உடனடி நடவடிக்கைகள் இதில் தேவைப்பட்டன. அதை கருத்தில் கொண்டு, 59 செயலிகளுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஜூன்-202018:57:41 IST Report Abuse
ஸ்டாலின் :: எப்படியும் JIO காரன் விடமாட்டான் இந்த APP எல்லாம் இவன் கொடுக்கும் DATA வினால் தான் அதிகம் என்று இவன் வந்தானோ அன்று தான் சிறிய பசங்கள் கூட CELLPHONE என்று அலப்பறை , தனியே உட்கார்ந்து கொண்டு பார்க்கிறார்கள் அப்போ ஏதோ தவறான வீடியோ என்று தெரிகிறது , செய்த நல்ல செயல் இது தான...
Rate this:
Cancel
30-ஜூன்-202013:42:53 IST Report Abuse
ஸ்டாலின் :: என்னவோ....
Rate this:
Cancel
30-ஜூன்-202011:34:04 IST Report Abuse
பாமரன் விடாதீங்க தல... இதைத்தான் ஆப்புன்னு சொல்வாய்ங்க... இந்தியா வல்லரசு ஆகிடும் டோய்.... அவனால் பழி வாங்க முடியாது.... ஏன்னா நம்ம ஆப் எதுவும் அவன் யூஸ் பண்ணுறதில்லையே...பிம்பிளிக்கி பிளாக்கி....
Rate this:
Shekar - Mumbai,இந்தியா
30-ஜூன்-202012:05:18 IST Report Abuse
Shekarவெட்கமே இல்லாமல் அடுத்த நாட்டுக்கு வால் பிடிக்கிறாய்....
Rate this:
Anand - chennai,இந்தியா
30-ஜூன்-202014:33:39 IST Report Abuse
Anandvetkam yenbadhu madhamaari kaikkooligalukku kidaiyaadhu....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X