தனிமையை நினைத்து கலங்கிவிடாதே

Updated : ஜூன் 29, 2020 | Added : ஜூன் 29, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
- டாக்டர் ஜெயஸ்ரீ ஷர்மா கொரோனா பரவும் வேகத்தைப் பார்த்தால் நோய் தொற்று இல்லாதவர்களை மட்டும் தனிமைப்படுத்தினால் போதும் என்கின்ற அளவிற்கு பரவிக்கொண்டு இருக்கிறது.கொரோனா நோய் தொற்றில் இருந்து யாரும் தப்ப முடியாது ஆனால் அதை மரணம் வரை கொண்டு போகாமல் எளிதில் கடந்து விடலாம்.விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எல்லோரும் தனிமையில் இருந்துதான் ஆகவேண்டும்.இப்போது

- டாக்டர் ஜெயஸ்ரீ ஷர்மாlatest tamil news


கொரோனா பரவும் வேகத்தைப் பார்த்தால் நோய் தொற்று இல்லாதவர்களை மட்டும் தனிமைப்படுத்தினால் போதும் என்கின்ற அளவிற்கு பரவிக்கொண்டு இருக்கிறது.

கொரோனா நோய் தொற்றில் இருந்து யாரும் தப்ப முடியாது ஆனால் அதை மரணம் வரை கொண்டு போகாமல் எளிதில் கடந்து விடலாம்.

விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எல்லோரும் தனிமையில் இருந்துதான் ஆகவேண்டும்.இப்போது மருத்துவமனையில் இடமில்லாததால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கின்றனர்.


latest tamil newsதனிமைப்படுத்தும் சூழ்நிலை வந்தால் கவனிக்க வேண்டியது என்ன

இருமல், சளி, காய்ச்சல் வந்தாலே நம்மை நாமே தனிமைப்படுத்திக்கொள்ள தொடங்கி விடவேண்டும்.உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று நோய் தொற்று பற்றி உறுதி செய்து கொள்ள வேண்டும்.கொரோனா இருக்கிறது என்றால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.

கழிப்பறையுடன் கூடிய தனிஅறையாக இருக்கட்டும் அந்த அறை ஜன்னலுடன், மின்விசிறியுடன் கூடிய காற்றோட்டமான அறையாக இருக்கட்டும்.தரை மற்றும் கழிப்பறையை சுத்தம் செய்ய தேவையான சாதனங்கள் இருக்கட்டும்.

சோப்பு கலந்த சுடுநீரில், துணிகளை நனைக்கும் வசதி,,ஒருமுறை மட்டுமே உபயோகப்படுத்த கூடியப் பொருட்கள்.
அலைபேசி , உடைகள் அறையினுள் பொழுது போக்க தேவையான பொருட்கள் புத்தகங்கள் இருக்கட்டும்.
வெப்பநிலை பார்க்கும் கருவி, ஆக்சிஜன் அளவுபார்க்கும் கருவி, இரத்த அழுத்தம் கண்டறியும் கருவி தேவை.
மருத்துவர் ,செவிலியர், மருத்துவமனை , அவசர ஊர்தி இவர்களின் அலைபேசிஎண்கள்.
Help line No: 011 - 23978048. Tamil Nadu

தனிமைப் படுத்தப்படுபவர் என்ன செய்ய வேண்டும்?

மனதை மன அழுத்தமின்றி மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவேண்டும்.
4 மணி நேரத்திற்கு ஒருமுறை வெப்பநிலை அளவு, ஆக்சிஜன் அளவு இவைகளை பரிசோதனை செய்யவேண்டும்.
தரைசுத்தம் செய்ய வேண்டும்.துணிகளை சோப்புகலந்த சுடுநீரில் நனைத்து , அறையின் வாயிலில் வைக்க வேண்டும்.
உபயோகித்த பாத்திரங்களைத் தாமே துலக்கி வைக்க வேண்டும்.வெளிப்பகுதியில் உள்ள ஜன்னலை குறைந்தது இரண்டுமுறையாவது சூரியஒளிபடுமாறு காற்றோட்டமாகத் திறந்து வைக்க வேண்டும்.மின்விசிறி உதவியுடன் காற்றோட்டத்தை அதிகப்படுத்த வேண்டும்.
முகக்கவசம் அணியவேண்டும். 6 - 8 மணி நேரம்கழித்து முகக்கவசம் மாற்றி கொள்ள வேண்டும்கதவுகளைத் திறக்கும்போது கைகளில் கிருமிநாசினி தடவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

உதவியாளர் என்பவர் ஒருவராகத்தான் இருக்க வேண்டும் அவர் முகக்கவசம், கையுறை அணிந்து முழுமையாக அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும். நேருக்குநேர் அவர்களைக் காண்பதை தவிர்க்க வேண்டும்.

நல்ல சத்துள்ள ஆரோக்கியமான உணவுகளைக் கொடுக்க வேண்டும்.கையுறைகளைப் பயன்படுத்தி, தனிமைபடுத்தப்பட்டவர் உபயோகப்படுத்த பொருட்களை கையாள வேண்டும்.பின்னர் கையுறைகளை நீக்கி சோப்பு நீரில் கைகளைக் கழுவ வேண்டும்.

உதவி செய்பவர் ஆக்சிஜன் பரிசோதனைக் கருவியை புளூடூத் இணைப்பு மூலம் இணைத்துக் கொள்ள வேண்டும்.
உபயோகப்படுத்தப்பட்ட முகக்கவசங்களை எரிக்க வேண்டும் அல்லது ஆழமாக புதைக்க வேண்டும்.

வீட்டில் உள்ள மற்றவர்கள் கவனிக்க வேண்டியது?

அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். தனி நபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.வெளியே செல்லக் கூடாது..
பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். வயதானவர்கள், கர்ப்பிணிகள்,, குழந்தைகள், நோய் உள்ளவர்கள் விலகி இருக்க வேண்டும். திருமணம் இறப்பு உள்ளீட்ட எவ்விதக் கூட்டங்களுக்கும் செல்லக் கூடாது., வெளிநபர்கள் வீட்டிற்கு வருவதைத் தவிர்க்க வேண்டும்.

வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு அரசு செய்யும் உதவிகள்?

அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு உதவுவர்.மேலும் மருத்துவ உதவிகள் மற்றும் ஆலோசனைகள் கிடைக்கும்.

வீட்டில் தனிமைப்படுத்தி இருப்பதன் மூலமாக என்ன பலன் / பயன்?

வீட்டில் சமைக்கும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடலாம்.மருத்துவசெலவு குறைவு.வீட்டில் உள்ளவர்களுக்கு மனநிறைவு..
மருத்துவமனைக்கு செல்லாததால் தீவிர நோயாளிகளுக்கு தன்னுடைய படுக்கைவசதியை தருவதற்கு ஒரு வாய்ப்பு.

உறவினர்கள் நண்பர்களைப் பொறுத்தவரை தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்களை ஒதுக்காதீர்கள் அவர்களிடம் அடிக்கடி பேசுங்கள். நலம் விசாரியுங்கள், அவர்கள் குடும்பத்திற்கு வேண்டிய உதவிகளை தயங்காமல் செய்யுங்கள்.

அன்பையும் ஆதரவையும் தாராளமாக வழங்குங்கள் காரணம் நாளை அவை நமக்கும் தேவைப்படலாம்.

வரும் காலத்தில் கொரோனாப் போரில் இழப்புகள் குறையும் நிச்சயம் கொரோனவை வெல்வோம் வாழ்வோம்.

டாக்டர் ஜெயஸ்ரீ ஷர்மாவிடம் பேசுவதற்கான எண்: 80560 87139.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
02-ஜூலை-202004:16:33 IST Report Abuse
skv srinivasankrishnaveni டாக்டரம்மா நீங்க சென்றது கரெக்டுங்க சென்னைலே இவ்ளோ அதிகம் அரவகாரணம் திருவல்லிக்கேணிபோல பல பகுதிகளிலே ஒண்டுக்குடித்தனம் அதிகம் மென்ஸங்கள் அதிகம் தனித்தனிக்கழிப்பறை வசதிகள் மேக்சிமம் கிடையாது பலரும் முட்டிக்கவேண்டிய நிலைமையேதான் மேனன் கட்டும் புண்ணியவனுகளுக்கு காசுதான் குறி மக்கள் நலம் பற்றி கவலையேபட மாட்டானுக ஒண்டிக்குடித்தனமளிருக்கறவா வசதிகளை எதிர்பார்ப்பதில்லீங்க நிஃதலே படுக்க இடம்வேண்டும் போதும் என்றுஇருக்குதுங்க .குடிசைப்பகுதிகளிலோ கேக்கவே வேண்டாம் அவ்ளோகலீஜு சென்னை மட்டுமில்லீங்க இந்த அவஸ்தை நம்மநாட்டுலே பல இடங்கள்லேயும் இருக்கு என்பதுதான் உண்மை அதுதனின்காரணம் கேவலமா இந்த கொரோன வெறியா பரவ றதுக்கும் மக்கள் அவஸ்த்தைக்கும் ஒரு ரூம் ஹால் கிச்செனிலே 400சதுர அடிவீட்டுலே ஒருபுறம் கிச்சன் மறுபுறம் டோஇலேட் குளியலறை என்று இருக்குவாழ்ந்துண்டும் இருக்காங்க என்பதும் உண்மை இவ்ளோகாலம் கொரோனா என்ற நோய்களின் தாக்கமில்லே இந்தாண்டுதான் கேக்குறோம் மிடில்கிளாஸ் அண்ட் ஏழைகள் மிகுந்த பகுதிகளிலே அதிகம் இருக்குங்க லக்கிலி மரணம்கள் கம்மி என்று சொல்லிண்டுருக்காங்க ஆனால் சாத்தியமா இந்த பழைய பகுதிகளை மாற்றவேமுடியாது என்பது சத்தியம் மக்கள் ஒத்துழைத்தாள் மட்டும்தான் கட்டுக்குள் வரமுடியும் ,ஆனால் அதுமுடியுமா சிந்திக்கவும் சாப்பிடணும் காய்கனிகள்வங்கிக்கனும் என்று எவ்ளோ ஜோலிகள் க்யூ லே இருக்கு தினம்
Rate this:
Cancel
ravi - chennai,இந்தியா
01-ஜூலை-202008:10:56 IST Report Abuse
ravi சூப்பர். ஆனால் இந்த மருத்துவர் சித்தா ஹோமியோ மருந்துகளை கொண்டு கொரோனா வராமல் பார்த்துக்கொள்ளலாம் என்று ஏன் சொல்லவில்லை
Rate this:
Cancel
Dr.R.Raveenthiranaath Nehru Ph.D. - Vilathikulam Pudur,இந்தியா
30-ஜூன்-202009:42:14 IST Report Abuse
Dr.R.Raveenthiranaath Nehru Ph.D. அருமையான கட்டுரை . மக்களின் நலன் பற்றி சிந்தித்து எழுதப்பட்ட படைப்பு . மருத்துவ உலகில் மிக சிலரே தமிழ் கட்டுரைகள் சிறப்பாக எழுதும் வல்லமை படைத்தவர்கள் . அந்த ஒரு சிலரில் இந்த கட்டுரை எழுதிய சகோதரியும் ஒருவர் . அனைவரும் படித்து பாதுகாத்து பிறறையும் படிக்க, பாதுகாக்க சொல்ல வேண்டிய கட்டுரை . அரசாங்கமே இதனை மக்களிடம் கொண்டு சேர்க்கலாம் . சமுதாயத்துக்கு நலம் பயக்கும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X