''மித்து... என்ன பண்றே?'' கேட்டவாறே, வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.''அக்கா... வாங்க! இப்பதான் 'ஆன்லைன்'கிளாஸ் முடிஞ்சது. 'எக்ஸாம்' எப்படி இருக்கும்னு, 'பிரின்ஸ்' பேசினாருங்க்கா,''''அப்போ, உனக்கு 'ஆன்லைனில்'தான் 'எக்ஸாம்', ஒரே கொண்டாட்டம்தான் போ,'' என்றாள்.''அக்கா... நீங்க சொன்னதும், ஆளுங்கட்சி பிரமுகர், கேக் வெட்டி, பொதுவெளியில 'பர்த்டே' கொண்டாடியது நினைவுக்கு வருது,''''யாருடி அது, எங்கே, எப்போது?'' கேள்விகளை அடுக்கினாள் சித்ரா.''அக்கா, நம்ம சிட்டியின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான அந்த தியேட்டர் இடத்தை வளைச்சுப்போட்ட பிரமுகருக்குத்தான் பர்த்டே. அவரோட, ஆதரவாளர்கள், ஆளுயுர மாலை போட்டு, கிடா வெட்டி விருந்து வெச்சாங்களாம்,''''என்னடி கொடுமையாயிருக்கு. பல கோடி மதிப்புள்ள அந்த இடம் பஞ்சாயத்தில் இருக்கறப்ப, அதுவும் ஊரடங்கு நேரத்தில, இந்த அலப்பறை தேவையான்னு, அவங்க கட்சி ஆளுங்களே கேட்கிறாங்களாம்,''''வர... வர... இவங்களோட, தொல்லை அதிகமாயிட்டே வருது. எங்க போய் முடியுமோ?'' என சித்ரா சொன்னபோது, அழைப்பு 'மணி' ஒலித்தது.கதவருகே சென்ற மித்ரா, ''யாருங்க,'' என்றதும், 'கருவம்பாளையத்தில இருந்து வர்றனுங்க. சாரை பாக்கோணும்,'என அந்நபர் சொல்ல, ''வெளியே போயிட்டார். நாளைக்கு வாங்க,'' எனக்கூறி அனுப்பி வைத்தாள்.''கலெக்டர் ஆபீசுக்குள்ளயும் கொரோனா வந்திருச்சுனு ரொம்ப பயந்துட்டாங்களாம்...'' தொடர்ந்தாள் சித்ரா.''ஆமாங்க்கா... இப்பல்லாம், ஆபீசர்ஸ் யார் கூட பேசறதே இல்லையாம். அதிலும், சிலர் போன் பேசறதையும் குறைச்சிட்டாங்க. போன வாரம் வந்து ஜாய்ன் பண்ண, 'அட்மின்' அதிகாரியும் அப்படித்தான். யாராச்சும் போன் பண்ணா கூட, அட்டெண்ட் பண்றதில்லை,''''இதுகூட பரவாயில்ல. கலெக்டர் ஆபீசில், ஒன்பது பேருக்கு கொரோனா. அதனால, 'வாக்கிங்' போக தடை போட்டுட்டாங்க'னு, யாரோ வதந்தி பரப்பி விட்டுட்டாங்க,''''இதை கேட்டுட்டு, எல்லா 'ஸ்டாப்'பும், ஆபீசுக்குள்ள போகாம, மரத்தடியிலேயே நின்னுட்டாங்க. வதந்தியை நம்பாதீங்க'ன்னு, இன்னொரு ஆபீசர் சொன்னதால, நிம்மதியாக போனாங்க,''''இந்த வதந்தி பரப்புறவங்களை கண்டுபிடிச்சு, ஸ்ட்ரிட்டா நடவடிக்கை எடுக்கணும்,'' என, சித்ரா சொன்ன போது, மித்ராவின் அம்மா, பலாப்பழத்தை டேபிள் மீது வைத்து, 'சாப்பிட்டுட்டே பேசுங்க,' என்றார்.அதன் மணத்தை நுகர்ந்த சித்ரா, உடனே சாப்பிட ஆரம்பித்தாள்.மித்ராவும் சாப்பிட்டவாறே, ''அக்கா... பலா மீது ஒரு ஆபீசருக்கு உயிராம்,'' என்றாள்.''அது யாருடி?''''ரூரல் துறைக்கு புதுசா வந்திருக்கிறவர், பலாப்பழ பிரியராம். இதை தெரிஞ்சுகிட்ட 'கான்ட்ராக்டர்'கள், ஆய்வுக்கு வரும் போதெல்லாம், ஒரு பழத்தை, அவரோட கார்ல வச்சு அனுப்பறாங்களாம்,''''ஆனாலும், வேலை விஷயத்துல சமாதானம் ஆகறதே இல்லையாம். 'ஸ்பாட்'ல அளந்து சரிபார்த்த பின்னரே, 'பில்' கையெழுத்து போடறாராம். அளவு கம்மியான, கான்ட்ராக்டரை கூப்பிட்டு டோஸ் விடறாராம்,''''இதை பார்த்துட்டு, 'சுளை மாதிரி இனிக்கமா, தோல் மாதிரியே குத்துறாரு, 'என கான்ட்ராக்டர்ஸ் நொந்து போயிட்டாங்களாம்,''''அவ்ளோ, கரெக்டா இருக்கறவர், பழ மேட்டரை தவிர்க்கலாமே,'' சிரித்தாள் சித்ரா.''அக்கா... தென்னம்பாளையம் மார்க்கெட்டில் அதிகாரிகளோட வேலையால, ஒரு டன் காய்கறி வீணா போச்சாம்,''''எப்படி?''''மார்க்கெட்டை ஆய்வு செய்ய கலெக்டர் வர்றாருன்னு, வந்த தகவலால், விளை பொருட்களை வாகனத்தை விட்டு இறக்காமல், சாக்கு போட்டு மூடி வையுங்கன்னு, மார்க்கெட் அதிகாரி சொன்னதால, விவசாயிகள், வியாபாரிகள் மூடி வச்சாங்களாம். ஆனா, சாயந்திரம் வரைக்கும், யாருமே வரலையாம்,''''நேரமாகி விட்டதால், விக்க முடியாம, அப்படியே போட்டுட்டு போய்ட்டாங்களாம். தாங்கள் சிக்க கூடாதுன்னு, சில அதிகாரியின் பொறுப்பற்ற செயலால் ஒரு டன் காய்கறி வீணா போனதுதான், மிச்சம்,''''இவரை போன்ற அதிகாரியை என்னன்னு சொல்றது மித்து,'' என்ற சித்ரா, ''குளுகுளு அதிகாரி ஒருத்தர் கோடிக்கணக்கில் சொத்து வாங்கி குவிக்கிறாராம்...'' போலீஸ் மேட்டருக்கு தாவினாள்.''எனக்கு தெரியலையே''''அவரு இப்பதான் புதுசா ஜாய்ன் பண்ணியிருக்கார். லிங்கேஸ்வரர் ஊருக்கு பக்கத்தில, தன்னோட 'ஒயிப்' பேர்ல, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு வாங்கிட்டாராம். இதைப்பத்தி, உயரதிகாரிக்கு தெரிஞ்சு 'என்கொயரி' போகுதாம்,''''போகட்டுங்க்கா.. அக்கா, இந்த வடக்கு போலீஸ் ஸ்டேஷன் 'சீல்'வச்சுட்டாங்கல்ல. அங்க இருக்கற அதிகாரிகள், நமக்கும் தொற்று வந்திடுமோன்னு பயந்து நடங்குறாங்களாம்,''''போலீஸ்காரங்க, பயப்படறது கொரோனாவுக்கு மட்டுந்தான்போல,''''உண்மைதாங்க்கா,'' சொன்ன மித்ரா, ''காளைக்கு பேர் போன ஊர் ஸ்டேஷனில், குட்டி அதிகாரியின் வசூல் வேட்டை தீரலையாம்,''''எதில பண்றார்?'''வெகிள் செக்கப்பின் போது, ஒருத்தரை நிறுத்தி செக் பண்றப்ப, 'சரக்கு' இருந்துச்சு. உடனே, விசாரிச்சு, 'பிளாக்'கில் வித்த இடத்துக்கு போய், மிரட்டியிருக்காரு. அங்கிருந்த, 50 பாட்டில், 10 ஆயிரம் ரொக்கத்தையும் லவட்டிட்டு, சத்தம் இல்லாம போயிட்டாராம். அவரு மேல, நெறைய கம்ப்ளைன்ட் வருது. உயரதிகாரி கண்டுக்கிட்ட பரவாயில்லதான்,''''ஆமா மித்து, நானும்தான் கேள்விப்பட்டேன், அதிகாரியை, 'முகம்' பார்த்து கவனிச்சுக்கிறாராம்,''''சரி, பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு. இந்த நெருப்பினால், எரிச்சல் உண்டாகும் பகுதி இ.பி. ஆபீஸ் மேட்டர் தெரியுமா?''''இல்லீங்களே...''''மின் கட்டண வசூல் அட்டையை ஒருத்தர் பிரின்ட் பண்ணி, ஸ்பான்ஸர் செஞ்சிருக்கார். ஆனா, அதிகாரிகள், அதனை பத்து ரூபாய்ன்னு மக்கள்கிட்ட குடுத்து வசூல் பண்ணிட்டாங்களாம். இப்படி, அட்டையை வித்து, பங்கு போட முடிவு பண்ணிட்டாங்களாம்,''''கடைத்தேங்காய எடுத்து வழிப்புள்ளையாருக்கு ஒடைக்கறதுன்னு சொல்லுங்க்கா,''''பழமொழி பின்றியே மித்து. நாளுக்கு நாள், மெதுவா கொரோனா அதிகமாயிட்டே வருது. கடைகளிலும், பஸ்களிலும், மக்கள் கூட்டம் கூட்டமாக இருக்காங்க. ஆனா, நடவடிக்கை பெரிசா இல்லை. இதனால, தொற்று பரவிடுமோன்னு, எல்லாரும் பயப்படறாங்க,''''உண்மைதாங்க்கா, அதிகாரி, சாட்டை எடுத்து சுத்துவாருன்னு பார்த்தா, கம்னு இருக்காரே. நம்மாட்களுக்கு மெதுவா சொன்ன புரியாதுங்க்கா. களத்தில் இறங்கி சொன்னாத்தான் பிரயோஜனமாக இருக்கும். இந்த வாரமாவது வெளியே வருவாரா?''என மித்ரா, கொரோனா மேட்டரை கூறினாள்.''ஓ.கே., மித்து, நா கெளம்பறேன்,'' என முக கவசத்தை சரி செய்தவாறே, தலை கவசத்தை மாட்டிக்கொண்டு, வண்டியை நோக்கி நடந்தாள் சித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE