பொது செய்தி

தமிழ்நாடு

'10 மடங்கு அதிகரித்தாலும் சமாளிக்க முடியும்!' அரசு முதன்மை செயலர் நம்பிக்கை

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement
 '10 மடங்கு அதிகரித்தாலும் சமாளிக்க முடியும்!' அரசு முதன்மை செயலர் நம்பிக்கை

திருப்பூர்:''கொரோனா பாதிப்பு, 10 மடங்கு அதிகரித்தாலும், சமாளிக்கும் அளவுக்கு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தயார்நிலையில் இருக்கிறது,'' என, அரசு முதன்மை செயலர் டாக்டர் கோபால் தெரிவித்தார்.திருப்பூர் மாவட்டத்தின், கொரோனா பணிகளுக்கான, சிறப்பு அதிகாரியாக, அரசு முதன்மை செயலர் (கால்நடைத்துறை) டாக்டர் கோபால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், கலெக்டர் விஜய கார்த்திகேயனுடன் சென்று, தற்காலிக மருத்துவமனைகளை நேற்று ஆய்வு செய்தார்.
நிருபர்களிடம், அவர் கூறியாதவது:மாநில அளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், திருப்பூர் மாநகராட்சி பகுதியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளன. தாலுகா தோறும், பள்ளி, கல்லுாரிகளில், தலா, 100 படுக்கை வசதியுடன் தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா, 10 மடங்கு அதிகரித்தாலும், எளிதாக சமாளிக்கும் அளவுக்கு, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன், மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்கிறது. மொத்தம், 3 ஆயிரம் பேர் தங்கி சிகிச்சை பெறும் அளவுக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. தேவையான, 'வென்டிலேட்டர்' வசதியும் செய்யப்பட்டுள்ளது.அறிகுறி இல்லாமல் தொற்று பரவுவதால், தாங்களாக முன்வந்தும் பரிசோதனை செய்து, தனிமைப்படுத்தி கொள்ளலாம். நம்மை நாமே தற்காத்துக்கொள்ள, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த வேண்டும்.தமிழக அரசின் நடவடிக்கைக்கு, மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மக்களுடன் தொடர்பில் உள்ள போலீஸ், சுகாதார பணியாளர், மருத்துவ பணியாளர் நலனிலும், மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
ஆர்.டி.ஓ., கவிதா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஷ், மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார், நகர்நல அலுவலர் பூபதி உடனிருந்தனர். கண்காணிப்பு மையம்கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு, கொரோனா பரிசோதனை செய்ய, தனியாக கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. வேலாயுதசாமி திருமண மண்டபத்தில், 50 படுக்கை வசதிகளுடன், தனி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாதிரி சேகரிப்பு மையம் அமைத்து, படுக்கைகள் வெளியே இருந்து பார்த்தால் தெரியாதபடி, வண்ணமயமான தடுப்பு அமைத்து, வசதிகள் குறித்த அறிவிப்பு பலகை வைக்கவும், சிறப்பு அதிகாரி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X