கற்றலில் புதிய வழிமுறைகளுக்கு கொரோனா காரணமாக உள்ளது

Updated : ஜூன் 30, 2020 | Added : ஜூன் 30, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
online learning, education, covid 19, coronavirus,கற்றலில் புதிய வழிமுறைகளுக்கு கொரோனா காரணமாக உள்ளது

புதுடில்லி : கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மாணவர்களின் கற்றலில் பின்னடைவு ஏற்படும் என்பதுடன் அனைவரும் அணுகும் வகையில் புதிய கல்வி முறைகளை உருவாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என 'யுனெஸ்கோ' கூறியுள்ளது.
இதுகுறித்து யுனெஸ்கோவின் அறிக்கை:
பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக உறுதியற்ற நிலை நீடிக்கிறது. பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டால் போதிய சமூக விலகலை அனைத்து நாடுகளும் முழுமையாகபின்பற்ற இயலாது.


latest tamil news
இந்த கல்வியாண்டில் மாணவர்களின் கற்றலில் கணிசமான பின்னடைவு ஏற்படும் என தெரிகிறது.பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் நிலையில் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளில் 17 சதவீதத்தினர் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளனர். அவர்களில் 22 சதவீதத்தினர் வகுப்பு நேரத்தை அதிகரிக்கவும் 68 சதவீதத்தினர் வகுப்புகளை தொடங்கும் முன் மாணவர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சிகளை அளிக்கவும் முடிவு
செய்துள்ளனர்.ஆனால் இது கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு மிக கடினமானதாக இருக்கும். கொரோனா வைரஸ் தாக்குதலால் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளுக்கு தொழில் நுட்ப ரீதியில் மட்டுமே தீர்வு காண இயலாது.
ஏனெனில் மிகச்சில நாடுகளில் மட்டுமே 'ஆன்லைன்' மூலம் வகுப்புகள் நடத்துவதற்கான உட்கட்டமைப்புகள் உள்ளன. பெரும்பான்மையான நாடுகளில் நேரடி கற்றல் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது.
இதற்கு தீர்வாக கற்றலில் புதிய வழிமுறைகளை உருவாக்குவது அவசியமாக உள்ளது.அத்துடன் அனைவரும் எளிதில் அணுகும் வகையிலான கல்வி முறைகளை அனைத்து நாடுகளும்
உருவாக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஜூன்-202008:12:49 IST Report Abuse
ஆப்பு கற்றலா? இங்கே எல்லாம் ஆல் பாஸ் முறைதான்.
Rate this:
Cancel
B.s. Pillai - MUMBAI,இந்தியா
30-ஜூன்-202005:01:15 IST Report Abuse
B.s. Pillai I read somewhere that a teacher was conducting classes on the road every day in the evening and the people residing in that road also cooperated with her by keeping the street clean by evening and clear of any movement to enable this teacher to conduct her classes without disturbance and very successfully. Such devotedd teachers in every street is the need of the hour. The students can sit on the entrances of hteir homes , keeping the safe distance and isolation and learn the lessons safely in a homely atmosphere. The government and the Education Department should organise such street schools more and more so that the % of educated increses in the state. Such tem, not only teaches the students, but it also can teach the illiterate parents also .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X