ஓரிரு நாட்களில் ம.பி., அமைச்சரவை விரிவாக்கம்

Updated : ஜூன் 30, 2020 | Added : ஜூன் 30, 2020
Share
Advertisement
cabinet expansion, chief minister Shivraj Singh Chouhan, politics

ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்கள் ஒன்பது பேருக்கு, அமைச்சர் பதவி வழங்க பா.ஜ., மேலிடம் முடிவு செய்துவிட்டதால், ம.பி.,யில் அமைச்சரவை விரிவாக்கம், இன்றோ, நாளையோ நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.


இழுபறி



காங்., மேலிடம் மீது அதிருப்தியில் இருந்த, ஜோதிராதித்ய சிந்தியாவை வளைத்ததன் மூலம், மத்திய பிரதேசத்தில், கமல்நாத் தலைமையிலான காங்., ஆட்சியை கவிழ்ந்து, மீண்டும் சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்தது. முதலில் முதல்வர் மட்டுமே பதவியேற்றுக் கொண்டார். கொரோனா பரவலால், அடுத்த சில தினங்களில், ஐந்து அமைச்சர்கள் மட்டுமே, அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.


latest tamil news




இந்நிலையில், பா.ஜ.,வில் இணைந்த சிந்தியாவுக்கு, ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கப்பட்டாலும், அவரை நம்பி வந்த ஆதரவாளர்களுக்கு, அமைச்சர் பதவிகள் தருவதில், சிக்கல்கள் எழுந்தன.
ஏற்கனவே பா.ஜ.,வினர், அமைச்சர் பதவிகளை எதிர்பார்த்திருந்த நிலையில், காங்.,கில் இருந்து வந்தவர்களுக்கு, பதவிகளை தருவதில், இழுபறி ஏற்பட்டது.தற்போது, இது சரிசெய்யப்பட்டு, இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்திற்கான ஏற்பாடுகள், இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளன. கடந்த, இரு நாட்களாக முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகானும், ம.பி., மாநில தலைவர் விஷ்ணுதத் சர்மாவும், டில்லியில் தான்
உள்ளனர்.உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்தர்சிங் தோமர் ஆகியோரை சந்தித்து, அமைச்சரவை விரிவாக்கம் குறித்து, விரிவாக ஆலோசித்தனர்.


இது குறித்த விபரம்:



டில்லியில் நடந்த ஆலோசனையின் முடிவில், 25 பேருக்கு அமைச்சர் பதவிகளை தர முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில்,பா.ஜ.,வில் உள்ள 16 பேர், பா.ஜ.,வில் இணைந்த சிந்தியா ஆதரவாளர்கள் ஒன்பது பேருக்கு தரப்படும்.அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி, ம.பி., சட்டசபையை, வரும் ஜுலையில் கூட்டியாக வேண்டும். அதுமட்டுமல்லாது, அமைச்சரவையில், குறைந்தபட்சம், 12 பேராவது, அமைச்சர்களாக இருந்தாக வேண்டும்.மேலும், அமைச்சரவை விரிவாக்கம் தள்ளிக் கொண்டே போனதால், சிந்தியாவின் ஆதரவாளர்கள் பலரும், 'மீண்டும் காங்கிரசுக்கே திரும்புவோம்' என மிரட்டும் அளவுக்கு, நிலைமை கைமீறி போனது.


புதிய அமைச்சர்கள்



இதையடுத்து, அமைச்சரவை விரிவாக்கத்தை, இனியும் தள்ளிப்போட முடியாதென முடிவு செய்து, பா.ஜ., மேலிடம் அனுமதி தந்துள்ளது.ம.பி., கவர்னர் லால்ஜி டாண்டன் தற்போது உடல்நலக்குறைவாக உள்ளார். இருப்பினும், பதவியேற்பு நிகழ்ச்சியை தள்ளிப்போட முடியாது என்பதால், உ.பி.,கவர்னர் ஆனந்திபென் படேலை, ம.பி.,க்கு கூடுதல் பொறுப்பாக நியமித்து, ஓரிரு நாட்களில் புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர்.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. - நமது டில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X