சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எஸ்.எஸ்.ஐ.,யை எட்டி உதைத்த 'மாஜி' எம்.பி., மீது வழக்கு

Updated : ஜூன் 30, 2020 | Added : ஜூன் 30, 2020 | கருத்துகள் (76)
Share
Advertisement
salem, salem news, crime news

சேலம் : எஸ்.எஸ்.ஐ.யுடன் தகராறில் ஈடுபட்டு எட்டி உதைத்த 'மாஜி' எம்.பி. அர்ஜுனன்(77) மீது மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் நல்லகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் அர்ஜுனன் 77. தர்மபுரி தொகுதி தி.மு.க. முன்னாள் எம்.பி.யான இவர் பல்வேறு கட்சிகள் தாவி தற்போது அ.தி.மு.க.வில் உள்ளார். நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு அர்ஜுனன் காரில் ஓமலுாரில் இருந்து சேலம் கிளம்பினார்.

ஓமலுார் சுங்கச்சாவடி அருகே எஸ்.எஸ்.ஐ. ரமேஷ், பட்டாலியன் போலீஸ் தேசிங் ஆகியோர் அர்ஜுனன் காரை நிறுத்தினர். தேசிங் 'இ - பாஸ்' கேட்க 'நான் யார் தெரியுமா முன்னாள் எம்.பி.' என அர்ஜூனன் தெரிவித்துள்ளார். 'அப்படியெனில் அடையாள அட்டையை காட்டுங்கள்' என தேசிங் கேட்க, டென்ஷன் ஆன அர்ஜுனன் 'யாரிடம் அடையாள அட்டை கேட்கிறீர்கள்' எனக் கூறி போலீசாரை ஆபாச வார்த்தைகளால் திட்டினார்.


latest tamil news




எஸ்.எஸ்.ஐ. ரமேஷை எட்டி உதைத்தார். இந்த சம்பவங்களின் வீடியோ காட்சிகள் 'வாட்ஸ் ஆப் பேஸ்புக்'கில் பரவின. எஸ்.எஸ்.ஐ. ரமேஷ் புகார்படி அர்ஜுனன் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆபாச வார்த்தைகளால் திட்டுதல் தாக்குதலில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளில் கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
01-ஜூலை-202009:26:12 IST Report Abuse
skv srinivasankrishnaveni வெறும் வெத்துவேட்டு ஓசில எம்பி ஆனதாள்கிடைக்கும் பெனிஷனிலேவாலும் இவ்ளோதிமிரா இவனுக்கெல்லாம் எப்போது உதைச்சானோ லத்தினாலே ஓங்கி விலாசிருக்கவேண்டும்
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
30-ஜூன்-202021:44:33 IST Report Abuse
Baskar இதற்க்கு நீதிமன்றமும் மனித ஆணையையும் என்ன சொல்ல போகிறது. போலீசார் அவரின் கடைமையை செய்ய விடாமல் தடுத்த குற்றத்துக்கு மதுரை நீதிபதி என்ன சொல்கிறார்.
Rate this:
Cancel
N S Sankaran - Chennai,இந்தியா
30-ஜூன்-202018:05:30 IST Report Abuse
N S Sankaran நான் வீடியோ பார்த்தேன். திரு ரமேஷை சிலர் தடுத்து விட்டார்கள், அநியாயமாக. விட்டிருந்தால் நல்ல பாடம் புகட்டியிருப்பார். அதை செய்யும் வரைக்கும் இந்த கேடுகெட்ட அரசியல் வியாதிகளின் ஆட்டம் தொடரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X