புடின் பதவி நீட்டிப்புக்கு ஓட்டளித்த மக்கள்

Updated : ஜூன் 30, 2020 | Added : ஜூன் 30, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

டோனட்ஸ்க்; ரஷ்ய அதிபர் பதவியில், 2036 வரை நீடிக்கும் வகையில், விளாதிமீர் புடின் கொண்டு வந்துள்ள அரசியல் சாசன திருத்தத்துக்கு ஆதரவாக, கிழக்கு உக்ரைனைச் சேர்ந்தவர்கள் ஓட்டளித்து வருகின்றனர்.



latest tamil news



கடந்த, 20 ஆண்டுகளுக்கு மேலாக, பிரதமர், அதிபர் பதவியில் உள்ள, ரஷ்ய அதிபர் விளாதிமீர் புடினின், 67, பதவிக் காலம், 2024ல் முடிகிறது. மேலும், 12 ஆண்டுகளுக்கு பதவியில் நீடிக்கும் வகையில், அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்வதாக, இந்தாண்டு ஜனவரியில் அவர் அறிவித்தார். அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்வதற்காக, ரஷ்ய மக்கள் கடந்த சில நாட்களாக ஓட்டளித்து வருகின்றனர்.

இந்நிலையில், ரஷ்யாவை ஒட்டியுள்ள, உக்ரைனின் கிழக்கு பகுதி, பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்தப் பகுதியை, லுஹான்ஸ்க் மற்றும் டோனட்ஸ்க் என்ற தனி நாடாக அறிவித்து செயல்பட்டு வருகின்றனர். இந்தப் பகுதியைச் சேர்ந்த, 2.20 லட்சம் பேருக்கு, ரஷ்ய பாஸ்போர்ட் வழங்க, புடின் உத்தரவிட்டார்.தற்போது நடந்து வரும் ஓட்டெடுப்பில், இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களும் ஓட்டளிக்க ஆர்வம் தெரிவித்தனர்.


latest tamil news



அதன்படி, ரஷ்ய எல்லையில் ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. டோனட்ஸ்க் பகுதியில் இருந்து, பஸ்கள் மூலம் மக்கள் அழைத்துச் செல்லப்பட்டு, ஓட்டளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. 'தங்களுக்கு தன்னாட்சி அளிக்க வேண்டும் அல்லது சீனாவுடன் இணைக்க வேண்டும்' என, இந்தப் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். புடினின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுவதால், இதற்கு வாய்ப்பு ஏற்படும் என்று இந்தப் பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்துஉள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramanathan Muthiah - Madras,இந்தியா
30-ஜூன்-202016:33:36 IST Report Abuse
Ramanathan Muthiah இதே முறையை நம்நாட்டில் தற்போது பின்பற்றினால் நிச்சயம் நல்ல முன்னேற்றம் காணலாம். வந்தே மாதரம் ஜெய்ஹிந்த். அதே போல மற்ற உருபுடாத அணைத்து கட்சியையும் மோடி அவர்கள் ஸம்ஹரஹம் செய்து அவரே நிரந்தர பிரதமருக்கு பதில் ரஷியாவை போல மோடியும் நம் நாட்டின் ஜனாதிபதி யாக பதவியில் இருக்கணும். இனிமேல் அது தான் நம் புதிய இந்தியாவில் 2020 நடக்கப்போகிறது. நம் இந்தியாவில் இனிமேல் இது அணைத்து மாநிலத்துக்கும் பொருந்தும். மோடி அவர்களுக்கு வோட்டு போடாதவர்கள் வாக்கு செல்லாது என்றல் கூட வரலாம் . அதனால், இப்பொததே அனைவரும் மோடியை எதிர்க்கும் மனநிலையை மாற்றிக்கொள்ளவும்.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
30-ஜூன்-202016:15:32 IST Report Abuse
Endrum Indian 2036 வரை இன்னும் 16 வருடம் பரவாயில்லையே பேஷ் பேஷ் இப்போவே 67 + 16 = 83 வரை பதவியில் இருக்கவேண்டுமா???இவர் திருக்குறள் படிக்கவில்லை "நெருநல் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை படைத்து இவ்வுலகு"????
Rate this:
Cancel
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
30-ஜூன்-202012:52:23 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன் இவரும் ஒருவேளை நம்மளை போல EVM தில்லு முள்ளு செய்திருப்பாரோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X