பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா நோயாளிகளுக்கு வீட்டுத் தனிமை; மதுரையில் புதிய திட்டம்

Updated : ஜூன் 30, 2020 | Added : ஜூன் 30, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
மதுரை: மதுரையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை உயர்வதால், சென்னையை பின்பற்றி லேசான, மிதமான பாதிப்புள்ளோரை வீடுகளில் தனிமைப் படுத்தும் திட்டத்தை மாநகராட்சி கையில் எடுத்துள்ளது.மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டிவிட்டது. தினமும் 300 பேர் வரை பட்டியலில் இடம் பிடிக்கின்றனர். படுக்கைகள் போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்கிறது. முகாம்களில் உணவு, குடிநீர்,
Madurai, isolation, coronavirus, covid 19, மதுரை, கொரோனா, வீட்டு தனிமை

மதுரை: மதுரையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை உயர்வதால், சென்னையை பின்பற்றி லேசான, மிதமான பாதிப்புள்ளோரை வீடுகளில் தனிமைப் படுத்தும் திட்டத்தை மாநகராட்சி கையில் எடுத்துள்ளது.

மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டிவிட்டது. தினமும் 300 பேர் வரை பட்டியலில் இடம் பிடிக்கின்றனர். படுக்கைகள் போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்கிறது. முகாம்களில் உணவு, குடிநீர், மருத்துவ வசதிகளுக்கு பற்றாக்குறை உள்ளது. இதனால் ஏற்பட்ட மனவேதனையில் திருப்பரங்குன்றம் முகாமில் 63 வயது முதியவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். நோயாளிகள் எண்ணிக்கை எகிறுவதால், தினமும் ஏதாவது சர்ச்சை அரங்கேறுகிறது.

இத்தகைய நிலை சென்னைக்கு வந்தபோது லேசான, மிதமான பாதிப்புள்ளோரை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் துவங்கப்பட்டது. இதற்கு இந்திய மருத்துவ மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் ஏற்கனவே அனுமதியளித்து, வழி காட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதை பின்பற்றி கொரோனா தாண்டவமாடும் மதுரை மாநகராட்சியிலும் அறிகுறியில்லாத, லேசான பாதிப்புள்ளோரை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் தயாராகிவிட்டது.


latest tamil newsஅதிகாரப்பூர்வ அறிவிப்பு:

இன்று அல்லது நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். முன்னதாக சோதனை அடிப்படையில் சில நோயாளிகளுக்கு வீட்டுத் தனிமைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 20க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தங்களை வீடுகளில் தனிமைப்படுத்தியுள்ளனர்.

மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ''தனிமைப்படுத்தப்பட்டோர் சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் இருப்பர். தீவிர பாதிப்புள்ளோர், பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு இத்திட்டம் பொருந்தாது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர்,'' என்றார்.


என்னென்ன வழிகாட்டுதல்


* நோயாளியை வீட்டில் தனிமைப்படுத்த தனி அறை வேண்டும்.குறைந்தபட்சம் இரு கழிப்பறைகள் அவசியம். பாதிக்கப்பட்டவர் பயன்படுத்தியதை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது.

* அவரை கண்காணிக்க குடும்ப உறுப்பினர் ஒருவரை நியமிக்க வேண்டும். உணவு, டாக்டர்கள் பரிந்துரைத்த மருந்துகள், சத்தான உணவுகளை குறித்த நேரத்தில் வழங்க வேண்டும். அப்போது சமூக இடைவெளியை கடைபிடிப்பது முக்கியம்.

* நோயாளி கண்டிப்பாக மூன்றடுக்கு மாஸ்க் அணிய வேண்டும். அவர் பயன்படுத்திய மாஸ்க்கை பாதுகாப்பான முறையில்சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும். வீட்டில் அவ்வப்போது கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.

* எப்போதும் சுகாதாரத்துறையுடன் தொடர்பில் இருக்க வேண்டும். நோயாளியின் உடல்நிலையில் ஏதாவது பாதிப்பு தென்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

* லேசான, மிதமான பாதிப்புள்ளோரின் உடல்நிலையை பரிசோதித்து டாக்டர் பரிந்துரைக்கும் நபர் மட்டுமே வீட்டுத் தனிமைக்கு அனுமதிக்கப்படுவர்.* அனுமதி கிடைத்தவர்கள், வீட்டுத்தனிமையை முறையாக கடைபிடிக்கும் உத்தரவாதத்தை தந்து, உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
30-ஜூன்-202018:20:15 IST Report Abuse
S. Narayanan இருப்பதோ ஒரே ரூம். அதில் எப்படி தனிமை படுத்தி வாழ முடியும். யோசிக்க வேண்டாமா.
Rate this:
Cancel
sankaran vaidyanathan - Coimbatore,இந்தியா
30-ஜூன்-202013:15:10 IST Report Abuse
sankaran vaidyanathan ஏழை எளிய மக்கள் சிறு அறைகளில் வசிக்கிறார்கள் சிறிய சந்துகளில் அல்லது கூடாரங்களில் .அநேகமாக இரவில் மட்டும் தூங்க பயன் படுத்து வார்கள் அவர்கள் நிலை அறியவில்லையா தனித்திருத்தல் எப்படி என்பதை சிந்திக்க வில்லையா
Rate this:
Cancel
Pats - Coimbatore,இந்தியா
30-ஜூன்-202012:57:08 IST Report Abuse
Pats என்னடா இது, மதுரைக்கு வந்த சோதனை சொக்கா... மதுரை... என் மனதில் நீங்கா இடம்பிடித்த திருநகர். மதுரைக்கு போக நினைத்தாலே மனதில் ஒரு துள்ளல், மகிழ்ச்சி ஏற்படும். சொக்கநாதர்-மீனாட்சியம்மை கோயில் கோபுரத்தை பார்த்தவுடன் ஒரு பரவசம் மனதில் தோன்றும். என்று மீண்டும் மதுரைக்கு வரலாம்... மதுரைவாழ் அன்பர்கள் சோதனைகளில் இருந்து மீண்டு வந்து, எனை மீண்டும் வரவேற்க வேண்டும். அன்புடன்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X